இஸ்லாம்- கேள்வி- பதில்

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.

பதில்:இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் – உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

01. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்
இஸ்லாம் என்ற வார்த்தை ‘ஸலாம்‘ என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘ஸலாம்‘ என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

02. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் – இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி – குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் – உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் – சமுதாய எதிரிகளை அடக்கவும் – குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ – அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் – நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் – நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O’Leary) யின் கருத்து.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O’Leary)  எழுதிய ‘இஸ்லாம் கடந்து வந்த பாதை’  (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் – மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது – வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.’

04. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.
ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் – ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

05. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians)
கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் – பிரிட்டிஷ்காரர்களும் – சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் – இன்று கூட – 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians) இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் – இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

06. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் – முஸ்லிம் அல்லாதோர்களை – தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே – இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

07. இந்தோனேஷியாவும் – மலேசியாவும்.
இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் – மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் – மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

08. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்
அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

09. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் – இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் – 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:
அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் – உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.

‘(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.’

11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான ‘அல்மனாக்’ பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை ‘தி ப்ளெய்ன் டிரத்’ என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

12. அமெரிக்காவிலும் – ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:
இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்
‘ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.’ என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.

நன்றி ஒற்றுமை.Net

காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் – இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் – இரத்தம் சிந்துவதையும் – மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?பதில்:

Dr.Zakir Naik , Farhan , Islamic News , farhanforyou

இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி – அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு – இஸ்லாமியர்களுக்கு – இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்.

01. அருள்மறை குர்ஆனின் வசனம்:
இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் – இரத்தம் சிந்துவதையும் – மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறார்கள்.

‘முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும், இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள்’ என்கிற வசனம்தான் அது.

02. மேற்படி வசனம் போர்ச் சூழலில் சொல்லப்படுகிற வசனம்:

இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் – மேற்படி வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்பதை வசதியாக மறந்து விட்டு – விமரிசனம் செய்கிறார்கள். மேற்படி வசனம் எதனால் – எந்த சூழ்நிலையில் சொல்லப்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில,; – மேற்படி அத்தியாயத்தின் முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டும். மேற்படி வசனம் மக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் – இறைவனுக்கு இணைவைப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் பற்றி தெரிவிக்கின்றது. மேற்படி ஒப்பந்தம் மக்காவில் உள்ள இணை வைப்பவர்களால் மீறப்பட்டது. எனவே மீறப்பட்ட ஒப்பந்தத்தை சரி செய்ய வேண்டி இணைவப்பவர்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் அளிக்கப் பட்டது. இல்லையெனில் அவர்கள் மீது போர் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனம் கீழ்க்கணடவாறு கூறுகின்றது:

‘போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.’ (அல் குர்ஆன் 9: 5)

மேற்படி வசனம் ஒரு போர்ச் சூழலில் சொல்லப்படுகின்றது.

03. அமெரிக்க – வியட்நாம் போர் – ஓர் உதாரணம்:
அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையே போர் நடந்த செய்தி நாம் அனவைரும் அறிந்த ஒன்று. அவ்வாறு போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அமெரிக்க ஜனாதிபதியோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியோ, அமெரிக்க வீரர்களிடம் – ‘எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ – அவர்களை கொல்லுங்கள்’ என்று உத்தரவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மேற்படி போர்ச் சூழலைப் பற்றி குறிப்பிடாமல் – தனியே ‘எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ – அவர்களை கொல்லுங்கள்’ என்று சொன்னதாக சொன்னால் – நாம் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியையோ மிகப்பெரிய கொலையாளி என்றுதான் எண்ணத் தோன்றும். மாறாக அமெரிக்காவிற்கும் – வியட்நாமிற்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு சொன்னார் என்று குறிப்யிட்டால் அது அறிவு பூர்வமாகத் தோன்றும். அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக அவ்வாறு சொன்னார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

04. அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டதே.!
அதுபோலவே அருள்மறை குர்ஆன் அத்தியாயம் ஒன்பது ஸுரத்துத் தௌபாவின் ஐந்தாவது வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டது. போர் நடக்கும் பொழுது எதிரிகளை கண்டு பயந்து விடாதீர்கள். அவர்களை வெட்டி வீழ்த்துங்கள் என்ற இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரியமூட்டுகிறது, அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம்.

05. அருண் சூரி ஐந்தாவது வசனத்திலிருந்து 7வது வசனத்திற்கு தாவி விடுகிறார்:
இஸ்லாத்தைப் பற்றி விமரிசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர் இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் அருண் சூரி. அவர் எழுதியுள்ள ‘ ஃபத்வாக்களின் உலகம்’ என்கிற புத்தகத்தின் 572 வது பக்கத்தில் அருள்மறையின் மேற்படி வசனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஐந்தாவது வசனத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர் உடனடியாக ஏழாவது வசனத்திற்கு தாவி விடுகிறார். இதன் மூலம் அருண் சூரி ஐந்துக்கும் ஏழுக்கும் இடையில் உள்ள 6வது வசனத்தை விட்டுவிட்டார் என்பது அறிவுள்ள எந்த மனிதரும் புரிந்து கொள்ளலாம்.

06. அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் 6வது வசனம் மேற்படி கட்டுக்கதை உண்மையல்ல என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் ஆறாவது வசனம் இஸ்லாம் வன்முறையையும் – இரத்தம் சிந்துவதையும் – மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

‘(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'(அல் குர்ஆன் 09:6)

அருள்மறை குர்ஆன் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இறைவனுக்கு இணைவைப்பவர்கள் உங்களிடம் புகலிடம் தேடுவார்கள் எனில், அவர்களுக்கு அபயமளியுங்கள் என்று சொல்வதோடு நின்று விடாமல், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை அவருக்கு பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்துகிறது. இன்றைய நவநாகரீக உலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு ராணுவத் தளபதியாக இருந்தால் – போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரி ராணுவ வீரர்களை மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் எந்த ராணுவ தளபதி எதிரி ராணுவ வீரர்களை, அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடையும்வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்?.

இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் – இரத்தம் சிந்துவதையும் – மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை. அமைதியையும் – சமாதானத்தையும் விரும்பக்கூடிய மார்க்கம் என்பதை மேற்கூறிய குர்ஆனிய வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது – இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் – கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.பதில்:

கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் – கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறு எதற்கும் தலைவணங்குவதும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறு எதனையும் தொழுவதுமில்லை.

அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

‘(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.’

01. இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது:
உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் இறைவனைத் தொழ விரும்பினால் – ஒரு சாரார் வடக்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். மற்றொரு சாரார் தெற்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். ஆனால் அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வைத் தொழுவதில் கூட இஸ்லாமியர்கள் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்; இறைவனைத் தொழும்போது இஸ்லாமியர்கள் அனைவரும் கஃபாவை முன்னோக்க வேண்டும் என பணிக்கப்பட்டிருக்கிறார்கள். கஃபாவிற்கு மேற்குப்புறத்தில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிழக்குத் திசையில் கஃபா இருப்பதால்) கிழக்குத்திசை நோக்கியும் கஃபாவிற்கு – கிழக்;குத் திசையில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேற்குத் திசையில் கஃபா இருப்பதால்) மேற்குத் திசை நோக்கியும் தொழுவார்கள்.

02. உலக வரை படத்தின் மத்தியில் கஃபா அமைந்துள்ளது.
இஸ்லாமியர்கள்தான் உலக வரைபடத்தை முதன் முதலாக வடிவமைத்தார்கள். உலக வரைபடத்தை வடிவமைத்த இஸ்லாமியர்கள் உலக உருண்டையின் தெற்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் – வடக்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைத்தபோது இஸ்லாமியர்கள் நோக்கித் தொழும் திசையான கஃபா – உலக வரைபடத்தின் மத்தியில் அமைந்திருந்தது. பின்னர் – மேற்கத்திய உலகின் வரைபடவல்லுனர்கள் உலக வரைபடத்தை வடிவமைத்தபோது – உலக உருண்டையின் வடக்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் – தெற்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். மேற்கத்தியர்கள் உலக வரைபடத்தை மாற்றி வடிவமைத்தாலும் – கஃபா அமைந்தது உலக வரைபடத்தின் மத்தியில்தான்.

03. கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறையைச் சுட்டிக்காட்டவே!
இஸ்லாமியர்கள் மக்காவிற்கு செல்லும் பொழுது மஸ்ஜிதே ஹரத்தில் உள்ள கஃபாவை சுற்றி வலம் வருவார்கள். அவ்வாறு கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறை என்னும் ஏக தெய்வ கொள்கையில் இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுட்டிக் காட்டவும் ஒரு இறைவனையே வணங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவுமே ஆகும். ஒரு வட்டம் ஒரே ஒரு மத்திய புள்ளியை மாத்திரம் கொண்டிருப்பது போன்று வணக்திற்குரிய இறைவனும் அல்லாஹ் ஒருவனே என்பதை உணர்த்த வேண்டியும் ஆகும்.

04. உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்று:
ஹஜ்ர் அல் – அஹ்வத் என்னும் கருப்புக் கல்லைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்றில் கீழக்கண்டவாறு அறிவிக்கிறார்கள்:

‘நல்லதோ அல்லது கெட்டதோ செய்ய முடியாத கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன்னைத் தொட்டு – முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் உன்னைத் தொட்டு முத்தமிட்டிருக்க மாட்டேன்’.மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி என்னும் செய்தி புத்தகத்தில் 56வது அத்தியாயத்தில் 675வது செய்திகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

05. கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்தல்:
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் – நபித் தோழர்கள் கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்துள்ளனர். கஃபாவை வணங்குவதாக இஸ்லாமியர்களை நோக்கிக் குற்றம் சுமத்துபவரை பார்த்து கேட்கிறேன் – எந்தச் சிலை வணங்கி அவர் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பார்?

 
மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் – மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?.பதில்:

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் – மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது உண்மை. அடியிற் காணும் விளக்கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:

01. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.
நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும்; ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் – மற்றும் ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு. அதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் – அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் – உலகத்தில் உள்ள மக்களுக்கும் பொதுவான மார்க்கமாக இருந்தாலும் – இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது – இரண்டு புனித நகரங்களான மக்காவும் – மதினாவுமாகும். இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த – இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன் எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த – இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது அல்ல.

02. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் ‘விஷா’.
ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக ‘விஷா’ அதாவது அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில் தமக்கென வித்தியாசமான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ளன. மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் – விதிகளுக்கும் தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில்லை.

இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில் கடுமையான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுமதி கொடுப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வைத்துள்ளது. மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான தேவைகளையும் – நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சி;ங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்படுவேன் என்றால் மாத்திரமே என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் – மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் – தன் உதடுகளால் மொழிந்து உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய
‘லா இலாஹ இல்லல்லாஹ் – முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’ – வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி அவனது தூதராவார் – என்பதுதான்

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.பதில்:

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் – உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

01. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்
இஸ்லாம் என்ற வார்த்தை ‘ஸலாம்‘ என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘ஸலாம்‘ என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

02. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் – இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி – குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர். இது போன்ற வேளைகளில் – உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் – சமுதாய எதிரிகளை அடக்கவும் – குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது. இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ – அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் – நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் – நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O’Leary) யின் கருத்து.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி (De Lacy O’Leary)  எழுதிய ‘இஸ்லாம் கடந்து வந்த பாதை’  (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
‘இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் – மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது – வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது.’

04. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.
ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் – ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

05. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians)
கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் – பிரிட்டிஷ்காரர்களும் – சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் – இன்று கூட – 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians) இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் – இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

06. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் – முஸ்லிம் அல்லாதோர்களை – தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே – இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

07. இந்தோனேஷியாவும் – மலேசியாவும்.
இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் – மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் – மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

08. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்
அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

09. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் – இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் – 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:
அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் – உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.

‘(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.’

11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான ‘அல்மனாக்’ பத்திரிக்கை வெளியிட்டிருந்தது. மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை ‘தி ப்ளெய்ன் டிரத்’ என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

12. அமெரிக்காவிலும் – ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:
இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்
‘ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்.’ என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
 
பதில்:
 
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்?. என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.
 
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் – 02 வசனம் 173)
 
மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு – 145வது வசனத்திலும் – அத்தியாயம் பதினாறு – 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் – இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.
 
பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.
கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பைபிளின் அத்தியாயம் 11 – லெவிட்டிக்கஸ் (Leviticus) வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 – டியுட்டர்னோமி (Deuteronomy) வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.
மேலும் பைபிளின் அத்தியாயம் 65 – புக் ஆஃப் இஷையா (Book of Isaiyah) 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்றி இறைச்சி உண்பதால் – மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.
எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm)  ஊசிப்புழு (inWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.
 
பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது – இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் – குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி
 
பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.
பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் – மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் – மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
 
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.
பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் – காடுகளிலும் – வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.
 
ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் – பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் – பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.
 
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் ‘மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு’ (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் – மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் ‘ஐலேண்ட்’ என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை ‘மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு’ மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது
‘பூமியை உங்களுக்கு ஒரு விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன்’ என்கிறது குர்ஆனின் வசனம். இந்த வசனம் பூமி தட்டையானது என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேற்படி குர்ஆனின் வசனம், பூமி உருண்டையானது என்று நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளது இல்லையா?.பதில்:

1. பூமி ஓர் விரிப்பாக படைக்கப்பட்டிருக்கிறது.
மேற்படி கேள்வி அருள்மறை குர்ஆனின் 71வது அத்தியாயம் ஸுரத்துன் நூஹ்வின் 19வது வசனத்தை அடிப்பைடயாக கொண்டது. மேற்படி அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
‘அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.’
மேற்படி வசனம் அத்தோடு முடிந்து விடவவில்லை. அதனை அடுத்த வசனத்தில் முந்தைய வசனத்திற்கான காரணத்தையும் சொல்கிறது.

‘அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்’.(அல்குர்ஆன் 71:20)

மேற்படி வசனத்தில் உள்ள செய்தியை மற்றொரு வசனத்தின் மூலமாகவும் அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது. குர்ஆனின் 20வது அத்தியாயம் ஸுரத்துத் தாஹாவின் 53வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகிறது.

‘(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்..'(அல்குர்ஆன் 20:23)

பூமியின் மேல் பகுதி முப்பது மைல்களுக்கும் குறைவான தடிமனைக் கொண்டது. மூவாயிரத்து எழுநூற்றம்பைது மைல்கள் ‘ஆரம’; (பூமியின் மையப் பகுதிக்கும் மேல் பறப்புக்கும் உள்ள தூரம் – சுயனரைள) கொண்ட பூமியின் அடிப்பகுதியோட ஒப்பிடும்போது – முப்பது மைல் தடிமன் என்பது மிகவும் மெல்லியதுதான். பூமியின் அடிப்பகுதியானது வெப்பமான -திரவநிலையில் உள்ளது. பூமியில் மேல் பகுதியில் வாழக்கூடிய எந்தவிதமான உயிரினமும் – பூமியின் அடிப்பகுதியில் வாழ முடியாத அளவுக்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆனால் பூமியின் மேல் பகுதி உயிரினங்கள் வாழக்கூடிய நல்ல கெட்டியான நிலையில் இருக்கிறது. பூமியை விரிப்பாக்கி அதில் நாம் பயணம் செய்யக் கூடிய அளவுக்கு பாதைகளை அமைத்து தந்திருக்கிறோம் என்று அருள்மறை குர்ஆன் சரியாகத்தான் சொல்கிறது.

2. விரிப்புகளை சமமான தரை மாத்திரம் இல்லாமல் – மற்ற இடங்களிலும் பரப்பலாம்.
பூமி தட்டையானது என்று சொல்லும் அருள்மறை குர்ஆனின் வசனம் ஒன்று கூட கிடையாது. அருள்மறை குர்ஆனின் வசனம் – பூமியின் மேற்பகுதியை ஒரு விரிப்புடன் ஒப்பிடுகிறது. சில பேர் விரிப்புக்கள் சமமான தரையில் மாத்திரம்தான் விரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். விரிப்புக்களை பெரிய பூமி போன்ற கோளத்தின் மீதும் விரிக்கலாம் அல்லது பரப்பலாம். ஒரு பெரிய பூமி உருண்டையின் மாதிரி ஒன்றை எடுத்து – ஒரு விரிப்பை அதன் மீது பரப்பிப் பார்த்தால் – மேற்படி கருத்து உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக விரிப்புகள் – நடந்து செல்வதற்கு வசதியாகத்தான் விரிக்கப்படுகின்றன. அருள்மறை குர்ஆன் ஒரு விரிப்பை பூமியின் மேல் பகுதிக்கு உதாரணமாக காட்டுகிறது. பூமியின் மேல் பகுதியில் உள்ள விரிப்புப் போன்ற பகுதி இல்லை எனில் பூமியின் அடிப்பகுதியில் உள்ள வெப்பத்தின் காரணமாக பூமியின் மேல் பகுதியில் உள்ள எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாமல் போயிருக்கும். இவ்வாறு அருள்மறை குர்ஆனின் மேற்படி கூற்று அறிவு ரீதியானதோடு, அருள்மறை குர்ஆன் இவ்வுலகிற்கு வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு புவியியல் வல்லுனர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையைப் பற்றியும் குறிப்பிடுகிறது குர்ஆனின் மேற்படி வசனம்.

3. பூமி விரிக்கப்பட்டிருக்கிறது:
அதேபோன்று அருள்மறை குர்ஆனின் பல வசனங்கள் பூமி விரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன.
‘இன்னும், பூமியை – நாம் அதனை விரித்தோம்: எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாம் மேம்பாடுடையோம்.’ என்று அருள்மறை குர்ஆனின் 51வது அத்தியாயம் ஸுரத்துத் தாரியாத்தின் 48வது வசனம் குறிப்பிடுகின்றது.

அதுபோன்று அருள்மறை குர்ஆனின் 78வது அத்தியாயம் ஸுரத்துந் நபாவின் 6 மற்றும் 7வது வசனம் கீழக்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?. இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?’.
பூமி தட்டையானது என்று நாம் சிறிதேனும் பொருள்கொள்ளும் வகையில் அருள்மறை குர்ஆனின் எந்த வசனமும் குறிப்பிடவில்லை. அருள்மறை குறிப்பிடுவதெல்லாம் பூமி விசாலமானது என்றுதான். அருள்மறை குர்ஆன் பூமி விசாலமானது என்று குறிப்பிடக் காரணம் என்ன? என்று அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் 29 ஸுரத்துல் அன்கபூத்தின் 56வது வசனம் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.
‘ஈமான் கொண்ட என் அடியார்களே!. நிச்சயமாக என் பூமி விசாலமானது: ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.’

சுற்றுப்புற – சூழலின் காரணமாகத்தான் என்னால் நல்லது செய்ய முடியவில்லை, நான் குற்றங்களையேச் செய்து வந்தேன் என்று மேற்படி வசனத்தை தெரிந்த எவரும் மன்னித்துக் கொள்ளச் சொல்லி, சொல்ல முடியாது.

4. பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலானது:
அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துந் நாஜியாத்தின் 30வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகின்றது.
‘இதன் பின்னர் அவனே பூமியை விரித்தான.;’.
மேற்படி வசனத்தில் ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது. ‘தஹாஹா‘ என்னும் அரபி வார்த்தைக்கு முட்டை வடிவம் என்றும் விரித்தல் என்றும் இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘தஹாஹா’ என்னும் அரபி வார்த்தை ‘துஹ்யா’ என்னும் அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. மேற்படி ‘துஹ்யா’ என்னும் அரபி வார்த்தைக்கு ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவிலிருக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள். பூமியும் ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில்தான் உள்ளது.

இவ்வாறு பூமி ஜியோஸ்பெரிகல் (GEOSPHERICAL) வடிவில் உள்ளது என்கிற நவீன அறிவியல் உண்மையும், அருள்மறை குர்ஆன் கூறும் வசனங்களும் ஒத்தக் கருத்தை உடையதுதான்

இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது – முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை – நாணயமற்றவர்களாகவும் – ஏமாற்றுபவர்களாகவும் – லஞ்சம் வாங்குபவர்களாகவும் – போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.பதில்:

1. ஊடகங்கள் பரப்பும் அவதூறுகள்:
இஸ்லாம் ஓர் சிறந்த மார்க்கம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் உலகின் பெரும்பாலான ஊடகங்கள் இஸ்லாத்தைக் கண்டு பயந்து கொண்டிருக்கும் மேற்குலகத்தின் கையில் இருக்கிறது. இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை அச்சிட்டும், ஒலி-ஒளி பரப்பியும் வருகின்றன். இந்த ஊடகங்கள் இஸலாத்தைப் பற்றிய தவறான தகவல்களை தருவதையும், இஸ்லாமிய கருத்துக்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் தொழிலாக கொண்டுள்ளன.

எப்போது, எங்கு வெடிகுண்டு வெடித்தாலும் – எந்தவித ஆதரமுமின்றி – முதன் முதலில் குற்றம் சாட்டப்படுவது முஸ்லிம்கள்தான். இந்த குற்றச் சாட்டுக்கள் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கும். பின்னர் அவர்கள் வெளியிட்ட செய்தி தவறு என்று தெரியும் பட்சத்தில் – அந்த செய்தி முக்கியத்துவம் அளிக்கப்படாத செய்தியாக மாறிவிடும்.

ஓரு ஐம்பது வயது முஸ்லிம் பெரியவர் 15 வயது பெண்ணை – அந்த பெண்ணிண் சம்மதத்தோடு – திருமணம் செய்து கொண்டால் அந்த செய்தி ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கும். அதே சமயம் ஐம்பது வயது முஸ்லிம் அல்லாத ஒருவர் 6வயது சிறுமியுடன் வல்லுறவு கொண்டு விட்டால் அந்த செய்தி முக்கியத்துவம் அளிக்கப்படாமல் – செய்திக் குறிப்புகள் போன்று பிரசுரிக்கப்படும். அமெரிக்காவில் தினமும் 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. அந்த செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்படுவதில்லை. ஏனெனில் வல்லுறவு குற்றங்கள் செய்வது அமெரிக்கர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய் விட்டது.

2. ஒவ்வொரு சமுதாயத்திலும் குற்றவாளிகள் உண்டு.
இஸ்லாமியர்களில் சிலர் நம்பிக்கை, நாணயம் அற்றவர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் இந்த ஊடகங்கள் இஸ்லாமியர்கள் மாத்திரம்தான் இவ்வாறு இருப்பதாக பெரிது படுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு சமுதாயத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் சிலர் குடிகாரர்களாக இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் இஸ்லாம் அல்லாதவர்களில் பெரும்பான்மையோர் குடிகாரர்கள் என்பது என்பது அனைவரும் அறிந்த செய்தி.

3. மொத்த சமுதாயத்திலும் இஸ்லாமியர்களே சிறந்தவர்கள்:
இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு சில குற்றவாளிகள் இருந்தாலும் – உலகில் உள்ள மொத்த சமுதாயத்துடன் இஸ்லாமியர்களை ஒப்பிடும்போது – இஸ்லாமியர்கள்தான் சிறந்தவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. மொத்த சமுதாயத்திலும் இஸ்லாமியர்கள் தான் சிறந்தவர்கள். இஸ்லாமியர்கள் மது அருந்துவதை ஆதரிப்பதில்லை. இஸ்லாமியர்கள்தான் உலகத்திலேயே அதிகமாக தர்மம் வழங்குபவர்கள். நன்னடத்தை, பண்பாடு, மனித மாண்புகளைப் பொறுத்தவரை இஸ்லாமியார்களோடு வேறு எவரையும் ஒப்பிடமுடியாத அளவுக்கு இஸ்லாமியர்கள் சிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

4. வாகனம் ஓட்டுபவரை வைத்து வாகனத்தை பற்றிய கணிப்புக்கு வர வேண்டாம்.
ஒரு புதிய மாடல் ‘மெர்ஸிடிஸ் கார்’ சிறந்ததா இல்லையா என்பது பற்றி அறிய வேண்டுமெனில் – அந்த காரை ஓட்டுபவரை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. காரை ஓட்டுபவர் திறமை சாலியாக இல்லாமல் இருப்பதால் ‘மெர்ஸிடிஸ் கார்’ சிறந்தது இல்லை என்ற முடிவுக்கு வர முடியாது. ஒரு கார் சிறந்ததா இல்லையா என்று அறிய வேண்டுமெனில் காரை மோசமாக ஓட்டுபவரை வைத்து – கார் சிறந்தது இல்லை என்ற முடிவுக்கு வரக் கூடாது. மாறாக அந்த காருடைய திறமை என்ன?. அந்த காருடைய மற்றுமுள்ள பயன்கள் என்ன?. அந்த கார் என்ன வேகத்தில் செல்லும் – அந்த காருடைய எரிபொருள் நுகர்வு என்னவாக இருக்கும் – அந்த காருடைய பாதுகாப்புத் தன்மை என்ன?.. எனபதையெல்லாம் வைத்துதான் மேற்படி கார் சிறந்ததா? இல்லையா என்ற முடிவுக்கு வர வேண்டும். ஒரு வாதத்திற்காக இஸ்லாமியர்கள் நல்லவர்கள் அல்ல என்று வைத்துக் கொண்டாலும், இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களை வைத்து – இஸ்லாம் மார்க்கம் பற்றிய ஒரு முடிவுக்கு வருதல் கூடாது. இஸ்லாம் எந்த அளவுக்கு சிறந்த மார்க்கம் என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டுமெனில் – இஸ்லாத்தின் உண்மையான – தெளிவான ஆதாரங்களான – அருள்மறை குர்ஆனையும் – அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளையும் வைத்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

5. இஸ்லாத்தைப் பற்றி ஒரு முடிவுக்கு வர, இஸ்லாமிய கடமைகளை சரிவர பின்பற்றியவர்களை பாருங்கள்.
இஸ்லாத்தை சரிவர பின்பற்றியவர்களில் முதன்மையானவர் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்:
ஒரு வாகனத்தைப் பற்றிய முடிவுக்கு வர வேண்டுமெனில் – அந்த வாகனத்தை இயக்கக் கூடிய ஒரு சிறந்த வாகன ஓட்டியை வைத்து – வாகனத்தை இயக்கினால்தான் வாகனத்தை பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியும். அதுபோலவே – இஸ்லாத்தைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர – இஸ்லாத்தை சரியான முறையில் பின்பற்றுவதற்கு எடுத்துக் காட்டாய் விளங்கக்கூடிய – அல்லாஹ்வின் இறுதித் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளைப் பார்க்க வேண்டும் இஸ்லாமியர்கள் அல்லாத – ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் – அல்லாஹ்வின்தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஓர் சிறந்த மாமனிதர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். மைக்கேல் எச். ஹார்ட் எழுதிய ‘தி ஹன்ட்ரட் மோஸ்ட் இன்ஃபுளுயன்சியல் மென் இன் ஹிஸ்டரி’  (The Hundred Most Influential Men in History) என்ற புத்தகத்தில் – மனித மனங்களை கவர்ந்த நூறு மனிதர்களில் முதலிடம் வகிப்பது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இவ்வாறு அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு சிறந்த மரியாதை வழங்கிய வரலாற்று ஆசிரியர்களில் தாமஸ் கார்லில்,  (Thomas Carlyle) லா-மார்டின் (La – Martin)ஆகியோரும் அடங்குவர்

மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?பதில்:

மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் – சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.

அல்-குர்ஆன் மதுபானத்தை தடை செய்துள்ளது:

அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 90வது வசனத்தின் மூலம் அல்லாஹ் மதுபானம் அருந்துவதை தடைசெய்துள்ளான்:

“விசுவாசம் கொண்டவர்களே!. மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.” (அல்-குர்ஆன் அத்தியாயம் 05 – வசனம் 90)

மது அருந்துவதை பைபிளும் தடை செய்கிறது:
பைபிளின் 20வது அத்தியாயம் Proverbs உடைய 01வது வசனமும் 5வது அத்தியாயம் Ephesians உடைய 18வது வசனமும் மது அருந்துவது சிறந்தது அல்ல என குறிப்பிடுகின்றன.

மனித மூளையின் தடை செய்யும் மையத்தை (Inhibitory Centre) – இயங்க விடாமல் செய்கிறது மது பானங்கள்:


மனித மூளையில் தடை செய்யும் மையம் (Inhibitory Centre) என்ற ஒரு பகுதி உள்ளது. மனிதன் தான் செய்யும் செயல் தவறு என்று எண்ணும் செயல்களை செய்ய விடாமல் தடுப்பது மேற்படி தடை செய்யும் மையத்தின் பணி. உதாரணத்திற்கு தனது பெற்றோரையோ அல்லது தனக்கு மூத்தவர்களையோ கெட்ட வார்த்தைகளால் ஏசக்கூடாது என்று ஒரு மனிதனைத் தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. ஓரு மனிதன் தன் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால் – அதனை பொது இடத்தில் செய்யக் கூடாது என்று தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. போதையிலிருக்கும் ஒரு மனித மூளையின் தடை செய்யும் மையத்தின் பணி மது பானங்களால் தடை செய்யப்படுகிறது. எனவேதான் குடிபோதையில் இருக்கும் மனிதன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் செயல் படுகிறான். குடிபோதையில் இருக்கும் மனிதன் தனது பெற்றோரைக் கூட மோசமான வார்த்தைகளால் ஏசுவதும் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதையும் நாம் காண்கிறோம். போதையில் இருப்பவர்கள் தம் ஆடைகளிலேயே சிறு நீர் கழிப்பதையும் – சரியாக நடக்கவோ அல்லது பேசவோ முடியாமல் இருப்பதையும் பார்க்கிறோம்.

குடிப்பழக்கம் உள்ளவர்கள் விபச்சாரம் வல்லுறவு கொள்ளுதல் தகாதவர்களிடம் உடல் உறவு கொள்ளுதல் எய்ட்ஸ் போன்ற குற்றங்களைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.


1996 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அமெரிக்க நீதித்துறையின் ஒரு பிரிவான தேசிய குற்றவியல் புலனாய்வுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவித்தது. மேற்படி புள்ளி விபரத்தின்படி வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டோரில் பொரும்பாலானோர் போதையில் இருந்திக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துள்ளது. அது போன்றுதான் சமுதாயத்திற்கு தொல்லை தரும் பலரும் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பதையும் மேற்படி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

மேற்படி புள்ளிவிபர அறிக்கையின்படி 8 சதவீத அமெரிக்கர்கள் தகாத உறவு கொள்பவர்களாக இருக்கின்றனர். தகாத உறவு கொள்ளும் குற்றத்தில் ஈடுபடும் அனைவரும் – போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள். தகாத உறவில் ஈடுபடும் ஒருவரோ அல்வது இரண்டு பேருமோ போதையில் இருந்திருக்கிறார்கள் என்பதை மேற்படி அறிக்கை தெரிவித்திருக்கிறது.

உலகில் எய்ட்ஸ் என்னும் உயிர்க் கொல்லி நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக குடிப்பழக்கம் அமைந்துள்ளது.

குடிப்பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் ‘கௌரவத்திற்காக குடிக்க துவங்கியவர்களே!’
குடிப்பழக்கம் உள்ள பலரும் – மது பானங்களுக்கு ஆதரவாக தங்களை ‘கௌரவ குடிகாரர்கள்’ என்று அழைத்துக் கொள்வார்கள். தாங்கள் எப்பொழுதும் ஒன்று அல்லது இரண்டு பெக் மாத்திரம் குடிப்பதாகவும் அதனால் தாங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும் தாங்கள் ஒருபோதும் குடிபோதையால் பாதிக்கப்பட்டதில்லை என்றும் வாதிடுவார்கள். ஒவ்வொரு குடிகாரரும் துவக்கத்தில் ‘கௌரவ குடிகாரரராகத்தான்’ ஆரம்பித்திருக்கிறார் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு குடிகாரரும் – ஆரம்பத்தில் தான் ஒரு மொடாக் குடியனாக வேண்டும் என்ற எண்ணத்தில் குடிக்க ஆரம்பிப்பதில்லை. ஆனால் எந்த ஒரு குடிகாரரும் பல வருடங்களாக குடித்ததில் நான் ஒரு முறை கூட போதையால் பாதிக்கப்பட்டதில்லை – நான் குடித்த எல்லா நாட்களிலும் சுய கட்டுப்பாட்டுடன்தான் இருந்தேன் என நிச்சயமாக சொல்ல முடியாது.

ஓரு குடிகாரர் ஒருநாளாவது குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்து – பாதிக்கப்பட்ட அந்த நாளில் அவர் ஒரு மானக்கேடான செயலை செய்திருப்பாரேயானால் – அந்த மானக்கேடான செயல் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும்.

உதாரணத்திற்கு ஒரு ‘கௌரவ குடிகாரர்’ தனது சுய கட்டுப்பாட்டை ஒரு நாளாவது இழந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நாளில் அவர் ஒரு வல்லுறவு குற்றம் செய்துவிட்டாரெனில் அல்லது ஒருவரிடம் முறைகேடான உறவு கொண்டுவிட்டார் எனில் செய்த அந்த குற்றத்திற்காக அவர் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டிய நிலை உருவாகும். பாதிப்புக்கு உள்ளானவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படக் கூடிய நிலையும் – பாதிப்புக்கு உள்ளாக்கியவர் தான் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் வாழ வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

மதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள்:
மதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள் இஸ்லாமிய செய்திப் பேழைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது:
‘தீமைகள் அனைத்திற்கும் தாயானது போதையாகும். தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3371 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அதிக அளவில் பயன்படுத்தினால் போதை தரும் எந்த பொருளும் – குறைந்த அளவில் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3392 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அதிகமோ – குறைவோ இஸ்லாத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
மதுபானங்கள் அருந்துபவர்கள் மாத்திரம் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அல்ல. மதுபானங்கள் அருந்துவதில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவர்கள் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டவர்களே.
1. மதுபானம் தயாரிப்பவன் –
2. யாருக்காக மதுபானம் தயாரிக்கப்பட்டதோ அவன்
3. மதுபானங்களை குடிப்பவன் —
4. மதுபானங்களை விற்பனை கேந்திரங்களுக்கு கொண்டு செல்பவன்
5. யாருக்காக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டதோ அவன்
6. மதுபானங்களை பரிமாறுபவன்
7. மதுபானங்களை விற்பவன்
8. மதுபானங்கள் விற்று வரும் பணத்தை பயன்படுத்துபவன்
9. மதுபானங்களை வாங்குபவன்
10. மதுபானங்கள் யாருக்காக வாங்கப்பட்டதோ அவன்
ஆகிய பத்து சாரார் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குகிறது.’
என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸுனன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் – மூன்றாம் பாகத்தில் – முப்பதாவது அத்தியாயமான போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் 3380வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருட்கள் அதாவது மது பானங்கள் உட்கொள்ளக் கூடாது என்பதற்கு அறிவியல் ரீதியாகவும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நோயின் காரணமாக உலகில் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன எனில் – அந்த நோய் மதுபானம் அருந்துவதால்தான் இருக்கும். மதுபானம் அருந்துவதால் உலகில் லட்சக்கணக்கான மக்கள் மரணிக்கிறார்கள். மதுபானம் அருந்துவதால் ஏற்படும் நோய்கள் பற்றி நான் விரிவாக விளக்கத் தேவையில்லை. ஏனெனில் மதுபானம் அருந்துவதால் ஏற்படும் எல்லா நோய்களையும் நாம் அனைவரும் பொதுவாக அறிந்ததுதான். இத்துடன் நான் வரிசைப்படுத்தியிருக்கும் – நோய்கள் – அனைத்தும் போதைப்பொருட்களை பயன்படுத்தவதால் – குறிப்பாக மதுபானங்களை அருந்துவதால் உண்டாகும் நோய்களாகும்.

1. மதுபானங்கள் அருந்துவதால் ஈரலரிப்பு நோய் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
2. மனித உடலின் இரப்பை – தலை – கழுத்து மற்றும் ஈரல் போன்ற இடங்களில் புற்றுநோய் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
3. இரப்பை அழற்சி போன்ற குடல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
4. இரத்த அழுத்தநோய் – மற்றும் மார்பு வலி போன்ற நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
5. வாதம் – கைகால் முடக்கம் – வலிப்பு போனற் நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
6. நரம்பு மண்டலம் பாதிக்கப்படல் – நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
7. நினைவிழத்தல் – மூளைக் கோளாறு போன்ற மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது மதுபானங்களே.
8. தோல் வெடித்தல் – தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.
9. கை – கால் பதற்றம் – உடல் நடுக்கம் போன்ற நோய்கள் உண்டாக காரணமாக அமைவது மதுபானங்களே.
10. உடலில் பல பகுதியிலும் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் சுரப்பிகளை செயலிழக்கச் செய்வது மதுபானங்களே.
11. மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் உருவாக காரணமாக அமைவது மதுபானங்களே.
12. மதுபானங்களால் ஆண்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் பாதிப்புகளைவிட பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் பாதிப்பும் அதிகம். கருத்தரித்திருக்கும் பெண் மதுபானங்கள் அருந்துவதால் நன்றாக வளர்ந்த கரு கூட பாதிக்கப்படுகிறது. மது அருந்துவதால் கரு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமான பேரை மருத்துவ உலகம் அடையாளம் கண்டுள்ளது.

இவ்வாறு மது அருந்துவதால் ஏற்படும் நோய்கள் ஏராளம் . தாராளம்.

மது பழக்கம் ஒரு தீய நோய்.
மது அருந்துபவர்கள் மீது தம் தாராள மனப்போக்கை கைவிட்டுவிட்டார்கள் தற்போதைய மருத்துவர்கள். அது ஒரு கெட்ட பழக்கம் என்று அழைக்கப்பட்டது பழங்கதையாகி இப்போது மதுப்பழக்கத்தை ஒரு தீய நோய் என்று அழைக்கிறார்கள்.

மதுப்பழக்கம் ஒரு தீய நோய்
புட்டிகளில் அடைத்து மக்கிடையே விற்கப்படும் ஒரு தீய நோய்
தினசரி செய்தித் தாள்களில் – வாராந்திர மாதாந்திர பத்திக்கைகளில் வானொலியில் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப் படுத்தப்பட்டு மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய்
உரிமம் வழங்கப்பட்ட விற்பனை கேந்திரங்களில் விற்கப்படும் ஒரு தீய நோய்
அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு தீய நோய்
நெடுஞ்சாலைகளின் கோர மரணங்களுக்கு காரணமான ஒரு தீய நோய்
குடும்ப வாழ்க்கையைச் சீரழித்து சமூகக் குற்றங்கள் அனைத்திற்கும் காரணமான ஒரு தீய நோய்
எந்தவித நோய் எச்சரிக்கையோ – அல்லது நோய்க்கிருமிகள் பற்றிய எச்சரிக்கையோ இல்லாமல் மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய் எது என்றால்,  மதுபானம் என்ற தீய நோயே. என்பது மதுபானங்களின் பொடுமை பற்றி இஸ்லாமிய ஆய்வு மையம் – மும்பையிலிருந்து வெளியிட்டிருக்கும் ஒரு பிரசுரத்தின் வாசகமாகும்.

மதுபானம் அருந்துவது ஒரு நோய் என்று சொல்வதைவிட அதை ஷைத்தானின் ஊசலாட்டம் என்பதே பொருத்தமாயிருக்கும்:
அல்லாஹ் அருளிய அருள்மறை குர்ஆனில் ஷைத்தானைப் பற்றி அல்லாஹ் நமக்கு எச்சரிக்கை செய்கிறான். இஸலாமிய மார்க்கம் மனிதர்களுக்கு ஏற்ற இயற்கையான மார்க்கமாகும். ஐஷத்தானின் வேலைகள் அனைத்தும் – மனிதனை அவன் செல்லும் சீரான பாதையை விட்டும் தடுத்து கேடான பாதையில் அழைத்துச் செல்வதாகும். போதைக்கு அடிமையாகும் மனிதர்களும் சமுதாயமும் இயற்கைத் தன்மையை விட்டும் மாற்றமாக நடக்கும் சூழ்நிலையை நாம் காண்கிறோம். போதை – மனிதன் இருக்க வேண்டிய நிலையை விட்டும் – அசாதாரண நிலைக்குத் தள்ளப்படுவதையும் நாம் காண்கிறோம். எனவேதான் போதைப் பொருட்கள் உபயோகிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது

நன்றி ஒற்றுமை.net

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s