இஸ்லாத்தில் பெண்கள்

மர்வா ஸபா கவாக்ஸி: இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண்களில் ஒருவர்

ஆபிரிக்காவின் மொரோக்கோ முதல் ஆசியாவின் இந்தோனேசியா வரை பரந்து விரவிக் கிடக்கும் இஸ்லாமிய உலகில் பல கோடிப் பெண்கள் ஹிஜாபை துறந்திருக்கின்றபோது, ஹிஜாபுக்காக தனது குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவ உரிமையையும் உதறித் தள்ளிமைதான் மர்வா செய்த மாபெரும் புரட்சி.

1999 இல் துருக்கிய பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கான சத்தியப் பிரமாணத்தை எடுப்பதற்கு நுழைந்தபோது அங்கிருந்த கொடுங்கோன்மை மிக்க மதச்சார்பற்ற சக்திகள் கூக்குரலிட்டனர். அவரை ஒரு இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரி என்று வர்ணித்ததோடு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறும் காட்டுக் கூச்சல் போட்டனர்.
கலாச்சார உரிமைகள் குறித்து பேசும் ஐரோப்பாவில் உடுப்பதற்கான உரிமை மறுக்கப்பட்ட நிலையில், தனது குடியுரிமையையும் இழந்து அமெரிக்காவில் குடியேறியவர் கவாக்ஸி. இஸ்லாமிய அறிவுத் துறையிலும் சமூகப் பணிகளிலும் தஃவாவிலும் அரசியல் செயற்பாட்டிலும் ஓர் உயிர்த் துடிப்புள்ள ஆளுமையாக விளங்குகின்றவர். இந்நூற்றாண்டு கண்ட புரட்சிகரமான பெண்களில் ஒருவர்.
பல்வேறு மொழிகளில் பாண்டித்தியம் பெற்றுள்ள கவாக்ஸி, 21ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய கலாச்சார சின்னமான ஹிஜாபின் குறியீடாகப் பார்க்கப்படுகின்றவர். மதச்சார்பற்ற அரசாங்கம், மதச்சார்பற்ற சமூக அமைப்பில் இதுபோன்ற ஓர் போராளியைக் காண்பது மிகவும் அபூர்வம்.
மர்வா கவாக்ஸி 1968 ஒக்டோபர் 30 இல் அங்காராவில் பிறந்தார். 1999 ஏப்ரல் 18 இல் ஸ்தன்பூல் தொகுதியில் Virture கட்சியின் பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்டப்டார். மே 02 இல் ஹிஜாப் அணிந்தமைக்காக பாராளுமன்றம் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். கவாக்ஸி அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஒரு ஹாபிழ். ஹாவாட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை முடித்தவர். அதே பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர்.
தற்போது ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாகக் கடமையாற்றி வருகின்றார். அதேபோன்று ஹாவாட் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். மணவாழ்வில் இணைந்த அவருக்கு பாத்திமா, மர்யம் என இரு பெண்கள் உள்ளனர். ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இவர் விரிவுரையாற்றும் துறை ‘சர்வதேச உறவுகள்’ (International Relation) என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாவாட் பல்கலைக்கழகத்தில், அரசியல் விஞ்ஞானத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர், ஹாவாட் பல்கலைக்கழத்தில் MPA கற்கையைப் பூர்த்தி செய்தவர். அமெரிக்காவிலுள்ள மற்றொரு பிரபலமான டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் Software Engineering துறையில் BSc பட்டத்தையும் பெற்றுள்ளார்.
துருக்கியில் அங்காரா பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு அனுமதி கிடைத்தபோது வைத்தியராகக் கற்று வெளியேற வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. ஆனால், அவர் இளமைப் பருவத்திலிருந்தே அணிந்து வந்த ஹிஜாப் அதற்குத் தடையாக இருந்தது. கவாக்ஸி ஹிஜாபில் மிகவும் பற்றுள்ளவராக இருந்ததனால் அங்காரா பல்கலைக்கழக நிருவாகிகள் அவரை அங்கு கற்பதற்கு அனுமதிக்கவில்லை.
கவாக்ஸி பிறந்து வளர்ந்த குடும்ப சூழல் இஸ்லாத்தை பற்றுறுதியோடு பின்பற்றி வந்த குடும்பமாகும். அவரது தாயும் ஹிஜாப் அணியும் வழக்கம் கொண்டிருந்தார். கவாக்ஸியின் தாய் ஒரு பல்கலைக்கழக பேராசிரியர். ஹிஜாபினால் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவியை இழந்தவர். 1980 களில் கொண்டு வரப்பட்ட ஹிஜாபுக்கு எதிரான தடைச் சட்டமே இத்தனைக்கும் பின்னணியாக இருந்தது. தாயைப் போன்று கவாக்ஸியும் இந்த சோதனையையே எதிர்கொண்டார். கவாக்ஸியின் தாய் அதாதுர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றிவர். அவரது குடும்பம் முன்னாள் ஆட்சியாளர் கமால் அதாதுர்க்கின் கையாட்களால் பல கெடுபிடிகளுக்கு உள்ளானது. ஹிஜாப் அணிந்தமையால் பல அவதூறுகளுக்கும் வசைகளுக்கும் அவர் உட்பட்டார்.
கவாக்ஸியின் தந்தை யூஸுப் ஸியா கவாக்ஸி அதாதுர்க் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கை பீடத்தில் பீடாதிபதியாகப் பணியாற்றியவர். பெண்களின் உரிமைகளுக்காக -குறிப்பாக, ஹிஜாப் உரிமைக்காக- தொடர்ந்தும் போராடி வந்தவர். இஸ்லாமிய மாணவர்களின் உரிமைக்காகப் போராடியதால் பதவி துறப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்.
மருத்துவ பீடத்திற்கு அவர் தெரிவானபோதும் தனது ஹிஜாபினால் அந்த வாய்ப்பை இழந்தார். பல்கலைக்கழக நிருவாகம் அவரைத் திருப்பி அனுப்பியது. மருத்துவராவதா அல்லது ஹிஜாப் அணிவதா என்ற தெரிவுக்கு முன்னால், கவாக்ஸி இரண்டாவது தெரிவை ஏற்றுக்கொண்டார்.
1990 களில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய கவாக்ஸி, அரசியல் செயற்பாடுகளில் இறங்கினார். தொடக்கத்தில் பேராசிரியர் நஜ்முதீன் அர்பகான் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ரபா கட்சியின் பெண்கள் அணிக்குத் தலைவராக இருந்தார். பின்னர் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து அணியில் பிளவுகள் ஏற்பட்டது.
துருக்கியின் மற்றொரு இஸ்லாமியக் கட்சியான இஸ்லாமிய பாஸிலாத் கட்சியில் (Virture) இணைந்து பாராளுமன்ற அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டார். 1999 ஏப்ரல் 18 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். மதச்சார்பற்ற துருக்கியில் தனது தனித்துவமான ஹிஜாபுடனேயே அவர் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அவரது தூர நோக்கிற்கும் அரசியல் வெல்திறனுக்கும் கிடைத்த வெற்றியாகவே அவரது பாராளுமன்ற அங்கத்துவம் இருந்தது. எனினும், மக்களின் அமோக ஆதரவோடு பாராளுமன்றம் நுழைந்தபோது, மதச்சார் பற்றவர்கள் அவருக்கு தடங்கல்களை ஏற்படுத்தினர். சத்தியப் பிரமாணம் செய்யும் இடத்திற்கு அவர் சென்றபோது அங்கிருந்தவர்கள் “பாராளுமன்றத்தை விட்டு வெளியேறு” என கூச்சலிட்டனர்.
1999 மே 2 இல் நடைபெற்ற இச்சம்பவம் துருக்கியில் மாத்திரமன்றி, முழு ஐரோப்பாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “அரசியலமைப்புச் சட்டத்தில் பாராளுமன்றத்தில் நுழையும் பெண் ஹிஜாப் அணிந்திருக்கக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எனினும், அவர்கள் என்னை அவமானப்படுத்துவதற்கும் மதச்சார்பின்மையின் தூய்மையைப் பாதுகாக்கவும் காட்டுக் கூச்சல் போட்டனர். ஆண்கள் ஷேட்டும் நீள் காற்சட்டை அணிய வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால், எந்தவொரு சட்டத்திலும் அவ்வாறில்லை. அவர்கள் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த வெறுப்பையே தமது வார்த்தைகளில் உமிழ்ந்தனர். மதச்சார்பற்ற அடிப்படைவாதிகளிடையே இஸ்லாத்தைப் பின்பற்றும் நான் அதற்கு மேலும் அங்கிருக்க விரும்பவில்லை. பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினேன் என்று கவாக்ஸி தனது அனுபவத்தை பத்திரிகையொன்றில் எழுதியுள்ளார்.
இந்த கசப்பான அனுபவத்திற்குப் பின்னர் துருக்கிய பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக மசோதா கொண்டு வரப்பட்டு அவரது குடியுரிமையைப் பறித்தனர். அவர் பிரதிநிதித்துவம் செய்த பாஸிலாத் கட்சிக்கும் 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் கவாக்ஸி வழக்குத் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் வெற்றி பெற்றார்.
துருக்கியின் கிராமப்புறமொன்றில் பிறந்து, அமெரிக்காவின் அதி முன்னோடி பல்கலைக்கழகங்களில் பயின்று, ஹிஜாப் குறித்து தனது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்த முதல் பெண் இவராகவே இருப்பார். 2000 ஆம் ஆண்டில் மீண்டும் வொஷிங்டன் திரும்பிய அவர், அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினார். துருக்கிய அரசாங்கத்திற்கு எதிரான வழக்கின் முடிவு 2007 இலேயே வெளிவந்தது.
கவாக்ஸி மிகச் சாதாரணமானதோர் பெண்ணல்ல. சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுள்ள, அறிவுத் துறையில் மிகவும் ஆழமான ஒருவர். இதனால்தான், முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் அவரால் விரிவுரை ஆற்ற முடிந்தது. ஆங்கிலம், பிரென்ஞ், ஆகிய மொழிகளில் மிகவும் பாண்டித்தியம் பெற்றுள்ள அவர், பல்வேறு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் இஸ்லாம் குறித்த விரிவுரைகளை ஆற்றி வருகின்றார். சர்வதேசளவில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
2004 இல் பெசிலோனியாவில் நடந்த உலக சமயங்களுக்கான மன்றத்தில் அவர் ஆற்றிய உரை மிகப் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றது. சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு புத்திஜீவியாகவே கவாக்ஸி கருதப்படுகின்றார். ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின், அமெரிக்க காங்கிரஸின், ஹெல்சிங்கியிலுள்ள மனித உரிமைப் பேரவையில் கவாக்ஸி ஆற்றிய உரைகளும் முக்கியமானவை.
அமெரிக்காவின் மெரியாட்டிலும் ஐரோப்பிய, கனேடிய பல்கலைக் கழகங்களிலும் வருகை நிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் கவாக்ஸி, ஹார்வேர்ட், யாலே, கேம்பி ரிட்ஜ், பேர்லின், ஒட்டோவா, மிலான், இன்ஸ்பேர்க் போன்ற உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களிலும் விரிவுரையாற்றியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில் நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்ட உலகின் செல்வாக்குள்ள 500 பேரின் பட்டியலில் கவாக்ஸியும் ஒருவர். Naap மற்றும் பூகோளப் பெண்கள் ஒன்றியம் 2005 இல் அவரை ‘அதிசிறப்பு மிக்க பெண்ணாகத் தெரிவுசெய்தது. மனித உரிமை முன்னேற்றத்துக்காகவும் பெண்களை வலுவூட்டுவதற்காகவும் போராடியவர் என்ற வகையில், அவரது பணிகள் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு சர்வதேச விருதுகளையும் அவர் வென்றுள்ளார்.
2000 ஆம் ஆண்டில் சர்வதேச பெண்கள் மற்றும் சிறுவர் ஒன்றியம், மனித இனத்துக்காகப் பணியாற்றியவர் என்ற விருதினை வழங்கியது. இவ்விருது ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் வழங்கப்பட்டது. இதேபோன்று 1999 இல் இந்த ‘ஆண்டின் தாய்’ (Mother of the year) எனும் விருதினை துருக்கியின் அங்காரா தேசிய இளைஞர் கழகம் வழங்கியது.
கவாக்ஸி ஒரு காலத்தில் அமெரிக்கக் காங்கிரஸுக்கான முஸ்லிம் உலகு தொடர்பான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அதேவேளை, பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் அவர் திகழ்கின்றார். Mediterraneal Quaterly எனும் பிரபலமான சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராக உள்ள கவாக்ஸி, இதுவரை 6 நூல்களை எழுதியுள்ளார். அவரது இணையத்தளத்தினூடாகவும் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் எழுதுவதினூடாகவும் இஸ்லாமிய சிந்தனைகளையும் கருத்துகளையும் முன்வைத்து வருகிறார். அவர் எழுதிய நூல்களில் Basortusus Demokrasi எனும் நூல் அறபு, ஆங்கிலம், பிரென்ஞ், பாரசீகம் ஆகிய மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ளது.
ஓர் அரசியல் செயற்பாட்டாளராக, சமூகப் போராளியாக, மாபெரும் அறிவு ஜீவியாக, எழுத்தாளராக என மர்வா ஸபா கவாக்ஸியின் பன்முக ஆளுமை விரிகின்றது. கவாக்ஸி இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. அவரிடம் கற்பதற்கு எமது பெண்களுக்கு நிறையவே உள்ளன.

இஸ்லாத்தில் பெண்களின் பங்கு

  ஆபிதா பானு

 بِسْمِ اللهِ الرَّحْمن الرَّحِيمِ

وَأَعِدُّواْ لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ (صدق الله العظيم

 உங்களால் இயன்ற வரை பலத்தையும் திறமையையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள் (8:60)

புகழ்யாவும் வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே உரியது.சாந்தியும், சமாதானமும் இறைதூதர் மீதும் அவர்களின் குடும்பத்தினர், நல்லறத்தோழர்கள்,உலகமுஸ்லிம்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

அறிவுக்கேற்ற மார்க்கமாம் நம் உயிரினும் மேலான இஸ்லாம் இன்று உலகெல்லாம் வளர்ந்து ஓங்கி நிற்பதற்கு பெண்களின் பங்கும் மகத்தானது என்பதை எவரும் மறுக்க முடியாது.

அரவணைப்பும், பொருளார உதவியும்: ஹிரா மலைக்குகையிலிருந்து வல்லான் இறைவனிடமிருந்து இறைச் செய்தியைப் பெற்று நடுங்கிய வண்ணம் ஸம்மிலூனீ” ”ஸம்மிலூனீ”’ زملوني زملوني  என்னைப் போர்த்துங்கள் என்னைப் பேர்ர்த்துங்கள் எனவேண்டி நின்ற நபி பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு,

பயப்படாதீர்! தைரியத்துடன் இருங்கள்!உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடாது. .உங்களைப் படைத்த நாயன் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டான்! நீங்களோ உண்மையாளர். உறவினரை ஆதரிப்பவர்! இன்னா செய்தாருக்கும் இனியவை செய்பவர். வாய்மையும் ஈகையும் மிக்கவர்! அப்படிப்பட்ட உங்களுக்கு அல்லாஹ் ஒரு தீமையும் செய்யமாட்டான். உங்களை ஒரு மாபெரும் காரியத்தை சாதிப்பதற்காகவே அந்த நாயன் தேர்ந்தெடுத் துள்ளான்.” என்று ஆறுதல் கூறித் தேற்றியவர் ஒரு பெண்மணி!

அதுவும் அவரது அன்புத் துணைவியாரான கதீஜா அம்மையார்! அது மட்டுமா? அரபு நாட்டிலே தமது வாணிபத்தின் மூலம் திரட்டிய கோடிக்கான சொத்துகளை இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக வாரி வாரி வழங்கி பெருமானாரின் முதுகெலும்பாக நின்று அரவணைத்து நிழலாக நின்றவர் ஒரு பெண்மணி என நினைக்கும் போது நம் நெஞ்சமெல்லாம் நிறைகிறது.

அன்று மட்டும் அவரது நெஞ்சுரம் மிக்க எஃகு போன்ற ஆறுதல் வார்த்தைகளும், பெருஞ்செல்வமும் இல்லையென்றால் பெருமானாரின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.

உம்மு ஷரீக் அல்அன்ஸாரிய்யா! மிகப்பெரும் செல்வச்சீமாட்டியான இவர் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக அள்ளி அள்ளி வழங்கியவரில் குறிப்பிடத்தக்கவர்.இவரது இல்லத்தை ஏழைகளும்,ஆதரவற்றோரும், தேவையுடையோரும் மொய்த்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் இல்லம் விருந்தினருக்கும்,பசித்தோருக்கும் எப்போதும் திறந்தே இருக்கும்.

போர்களத்தில் பாதுகாப்புப் பணி

உஹதுப் பொர்க்களத்திலே பெருமானாரின் தலையை குறிவைத்து எதிரிகளின் அம்புகளும், வாட்களும் வீசப்பட்ட வேளையில் அரணாகக் காத்து நின்றவர்களில் முன்னணியில் நின்றவர் ஒரு பெண்!

அவரே நுஸைபா என்னும் உம்மு உமாரா ரளியல்லாஹு அன்ஹா என்பவர்! பெருமானாரைக்காக்க உயிரையே துச்சமாக மதித்துப் போராடியவர் களில் குறிப்பிடத் தக்கவர். அப்போது அவருக்கு வயது 43..இப்போரில் இவருக்கு 12 காயங்கள் ஏற்பட்டன. தமது மகனை காயப்படுத்தியவனை ஒரே பாய்ச்சலில் வீழ்த்தினார். தமது 52 வது வயதில் யமாமா போரில் கலந்து கொண்டு தாம் சபதம் செய்தவாறு முஸைலமத்துல் கத்தாபை வெட்டிச்சாய்த்தார். இவரது வீரச்செயலைப் பாராட்டிய நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவரது வேண்டுதலை ஏற்று தம்முடன் சுவர்க்கத்திலி ருப்பதற்கு துஆ செய்தார்கள்.

எதிரிகளை வீழ்த்திய வீராங்கனைகள்

அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி உம்மு ஃபள்லு ரளியல்லாஹு அன்ஹா என்பவர், முஸ்லிமான தமது அடிமையை கொடுமைப்படுத்தியதற்காக அபூ லஹபின் தலையில் கட்டையால் அடித்த மரண அடி அவனது சாவுக்கே காரணமாயிற்று. இந்த மாபெரும் வீராங்கனையின் தீரத்தையும்,வீரத்தையும் மறக்க முடியுமா?

அன்னை ஸபிய்யா(ரலி).பெருமானாரின் மாமியான இவர் தமது 60 வது வயதில் அகழ் போரில் கலந்து கொண்டார்;. அப்போது பெண்கள் இருந்த பாதுகாப்பான இடத்திற்கே உளவு பார்க்க வந்த எதிரிப்படைத் தளபதியின் தலையை வெட்டி, எதிரிகளின் கண் முன்னே தூக்கி வீசுய அபாரச்செயல் எதிகளை கதிகலங்கச்செய்து ஓடவைத்தது.ஒரு முஷ;ரிக்கைஇணைவைத்தவனை முதன் முதலாகக் கொன்ற பெருமையைப் பெற்ற இந்த பெண்மணியின் துணிவுமிக்க செயலை மறக்கமுடியுமா?

உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் உஹத் போர்க்களத்தில் பங்கு கொண்ட பதினான்கு பெண்களில் ஒருவர். கர்ப்பிணியாக இருந்தும் ஹுனைன் போரிலே பங்கேற்றபோது தமது இடுப்பிலே ஒரு கத்தியை வைத்திருந்தார்கள்.இதற்கான காரணத்தை நபிகளார் கேட்டபோது இணைவைக்கும் எவனாவது என்னை நெருங்கினால் அவனது வயிற்றை கிழிப்பதற்காகத்தான் என்றார்கள். இவர்களின் தீரத்தை வரலாறு மறக்க முடியுமா?

கவ்லா பின்த் அல்அஸ்வர் அல்கந்தீ ரளியல்லாஹு அன்ஹா

அரேபியர்களுக்கும் ரோமர்களுக்கும் நடந்த போரில் தளபதி காலித் பின் வலீதின் தலைமையில் அவருக்கே தெரியாது கறுப்பு உடை தரித்து பச்சைத்தலைப்பாகை அணிந்து வாளும் வேலும் ஏந்திஎதிரிப்படையிலே புயலெனப் பாய்ந்து எதிரிகளை வெட்டிச் சாய்த்தவண்ணமிருந்தார். இவர் ஒரு பெண் என்பது போரின் வெற்றிக்குப்பிறகே தெரியவந்தது. இவரது அபார ஆற்றலை வரலாறு மறக்க முடியுமா?

பெண் கவிஞர் கன்ஸா பின்த் அம்ர் ரளியல்லாஹு அன்ஹா: இவர் தமது நான்கு ஆண் மக்களுடன் காதிஸிய்யா போரிலே கலந்து கொண்டார்கள். இவரது பொறி பறக்கும் வீர உரைகளைக் கேட்ட இவரின் நான்கு ஆண் மக்களும் களத்திலே குதித்து வீரப்போராடி ஷஹீதுகளானார்கள் என்ற செய்தியை அறிந்ததும், அல்ஹம்துலில்லாஹ்! என் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டது. ”யாஅல்லாஹ! உனது வீர சுவர்க்கத்திலே எங்களை ஒன்று சேர்ப்பாயாகஎன்று அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்து துஆ செய்தது நமது இதயங்களையெல்லாம் உருகச் செய்கிறது.

அஃப்ரா பின்த் உபைத் அந்நஜ்ஜாரிய்யா ரளியல்லாஹு அன்ஹாதமது ஏழு மக்களுடன் பத்ருக்களத்திலே குதித்து மாபெரும் வரலாற்றுச்சிறப்பு மிக்க பத்ரு வெற்றிக்கு உறுதுணையாக நின்றது வரலாற்றிலே அழியாத இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இவர்களின் பங்களிப்புகளை நாம் மறக்க முடியுமா? போராட இயலாதவர்கள், போர் வீரரகளுக்கு உணவு தயாரித்தல்,தண்ணீர் வினியோகித்தல்,காயங்களுக்கு கட்டுப்போட்டு மருத்துவ உதவி செய்தல்,போர் வீரரர்களை வீரப்பாடல்கள் பாடி உற்சாகப்படுத்துதல் போன்ற அரும் பணிகளையும் செய்து வந்தார்கள்.

தீரம் தியாகமும்

அன்னை உம்மு ஸலாமாவின் தியாகத் துடிப்பைப் பாருங்கள்! தம் கணவருடன் ஹிஜ்ரத் புறப்பட்டுச் சென்ற வேளை, தம்மைத்தடுத்து தமது பிஞ்சுக் குழந்தையையும் குரைஷpகளும்,உறவினர்களும் பறித்து வைத்துக்கொண்ட நிகழ்ச்சி உள்ளத்தை உருகச்செய்கிறது.

தமது கணவருடன் பெருமானாரின் பாசறைக்குப் போக முடியவில்லையே! தம்மை அழைத்துச் செல்ல யாரேனும் முன் வரமாட்டார்களா? என ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து வந்து தன்யீம்என்ற இடத்iதிலே காலை முதல் மாலை வரை காத்துக் காத்துக் கிடப்பார்கள் அன்னையவர்கள்.

எத்தனை நாட்கள் தெரியுமா? ஒரு நாளல்ல! ஒரு வாரமல்ல! ஒருமாதமல்ல! ஒரு ஆண்டு முழுவதும் இப்படியே வந்து போவார்கள். இறுதியாக அவர்மீது இரக்கப்பட்ட சில உறவினர்கள் பரிதாபப்பட்டு அவர்களின் பிஞ்சுக் குழந்தையையும் வாங்கிக் கொடுத்து மதீனாவுக்கு அனுப்பி வைத்தார்கள். இது போன்ற வரலாறைக் கண்டிருக்கிறோமா?

உஃத்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரி உம்மு குல்தூம் பின்த் உக்பா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், தனித்தனியாக மக்காவிலிருந்து மதீனாவுக்கு கால் நடையாக ஹிஜ்ரத் சென்றார்கள். அதைப்போல் உம்மு ஹக்கீம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் தன்னந்தனியாக மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற தீரமிக்க வீர வரலாற்றுகளை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இது மட்டுமா?

அன்னை அஸ்மா பின்த் அபீ பக்ர்ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நிறை மாதக் கர்ப்பிணியாக இருக்கும் போது 400 கிலோ மீட்டர் தொலை தூரமுள்ள மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றது நம்மையெல்லாம் மயிர்கூச்செரியச் செய்யவில்லையா?அதைவிடவும் ஒரு படி மேலே சென்றவர் அன்னை அஸ்மா பின்த் உமைஸ்

ரளியல்லாஹு அன்ஹா! பிரசவம் ஒருபெண்ணுக்கு மறு பிறவி என்பார்கள். தமக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பிரசவம் நடக்கும் என்பதைத் தெரிந்தே உயிரினுமினிய நபி பெருமானாருடனும் தமது அன்புக்கணவருடனும் 400 கி.மீட்டர் தொலைவுள்ள மக்காவுக்கு புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதும் சில நாட்களில் துல்ஹுலைபாவில் பிரசவம் நடந்ததும், அடுத்த சில நாட்களில் பிள்ளை பெற்ற உடம்புடன் புனித ஹஜ்ஜுக்குப் புறப் பட்டுச் சென்றதும் வரலாற்றிலே காணமுடியாத அதிசய நிகழ்ச்சியாகும். இது போன்றதோர் நிகழ்ச்சியை வரலாற்றிலே நாம் கேள்விப்பட்டிருப்போமா? இது மட்டுமா?

இதைப் போன்ற வீர தீர வரலாறுகளை உலகம் வேறு எங்காவது கண்டிருக்குமா? கேட்டிருக்குமா? இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான உத்தமிகள் இஸ்லாத்திற்காக தங்களின் பங்களிப்புகளை வழங்கிய வரலாறுகள் வரலாறு நெடுகிலும் மின்னி மிளிர்வதைப் பார்க்கலாம்.

பெண்களிலே சொல்லாற்றல் மிக்க நாவலர்

அஸ்மா பின்த் யஸீத்ரளியல்லாஹு அன்ஹா! அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் மிக்க இவர்; ”பெண்களிலே நாவலர்” (கத்தீபத்துன்னிஸா) எனப் போற்றப்படுபவர். இவரது துணிவு மிக்க உரையைக் கேட்டு பெருமானாரே அசந்து விட்டார்கள். யர்மூக் போரிலே பங்கேற்று ஒன்பது ரோமர்களை கொன்றொழித்ததும்,மக்கா வெற்றியிலே பங்கேற்று சாதனை படைத்ததும் வரலாறு மறக்க முடியுமா?

இலக்கியம் :

பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருஉருவத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டுவது போல் இலக்கிய நயத்தோடு பெருமானாரின் வர்ணனையைக் கூறும் உம்மு மஃபத் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இலக்கியச் சேவையை மறக்க முடியுமா?

கல்வி

கல்விக்கு அரும் பணியாற்றிய அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை,

சீரிய ஆலோசனைகள் வழங்கிய அன்னை உம்மு ஸலமாவின் அறிவுக்கூர்மை யை,குர்ஆனை போதனைசெய்து இமாமத்தும் நடத்தி வந்த உம்மு வரகாவின் ஆர்வத்தை, ஹதீஸ் கலையில் சிறந்த ஸைனப் பின்த் அபீ ஸலமாமாவின் ஹதீஸ் புலமையை,

மதப்பிரச்சாரமும் போதனையும் செய்த ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா, ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹா, உம்மு ஷரீக் அல் குரஷிய்யா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோரின் அறிவுப்பணி களையும் இஸ்லாத்திற்கு அவர்கள் வழங்கிய பங்களிப்புகளையும் நாம் மறக்க முடியுமா?

அடுத்து பாத்திமா பின்த் அஸத், உம்மு ஃபள்லு,உம்மு ரூமான்,உம்மு ஐமன்,போன்ற தன்னலமற்றவர்களின் சமுதாயச் சேவைகளை நாம் மறக்க முடியமா?

லைலா பின்த் அஸத், ஃபாத்திமா பின்த் கைஸ் போன்ற பெண் மேதைகள் அரசியலுக்கும், ஆட்சி அதிகாரங்களுக்கும் வழங்கி வந்த அரிய ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் நாம் மறந்து விடமுடியுமா?

எளிதில் சுவர்க்கம் சென்று விட முடியுமா?

இது போன்ற எந்த ஒரு தியாகமும், சேவையும்,பங்களிப்பும் இஸ்லாத்திற்குச் செய்யாது வெறுமனே சுவர்க்கம் சென்று விட முடியுமா? அதை நினைத்துக்கூட பார்க்க முடியுமா?

அதனால் தான் இறைவன் நம்மை நோக்கிக் கேட்கிறான்:-

أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُواْ الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّهُ الَّذِينَ جَاهَدُواْ مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ

(இறை நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் உங்களில் அறப் போர் செய்தவர்கள் யார்? (தியாகம் செய்தவர்கள் யார்?) உங்களில் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு, சோதனைகளை வென்றவர்கள் யார்? என்பவற்றை அல்லாஹ் சோதித்துப் பார்க்காமலே நீங்களெல்லாம் (எளிதில்) சுவர்க்கம் சென்று விடலாம் என எண்ணிக் கொண்டீர்களா? (3:142)

மேலும் ,أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ நாங்கள்; ஈமான் கொண்டு விட்டோம் என்று (பெயரளவில்) கூறுவதால் (மட்டும்)அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? (29:2) என்றும் கேட்கிறான இறைவன்;.

இவர்கள் சேதிக்கப்படாமல் மட்டுமல்ல, சும்மாவும்; விட்டு விடப்படமாட்டார்கள். அல்லாஹ் மேலும் கூறுகிறான்:- أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى

மனிதன் வெறுமனே விட்டுவிடப்படுவான் என்று எண்ணிக் கொள்கின்றானா? (75:36) என்று இறைவன் நம்மைப் பார்த்துக் கேட்பது நமது காதுகளில் விழவில்லையா ?

நாம் உண்டு சுகித்து இஸ்லாத்திற்காக எந்த தியாகமும் பங்களிப்பும் செய்யாது உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமே!நாம் இறைவனிடம் என்ன பதில் சொல்வது? அப்படியானால் நாம் போலியான நரகத்திற்குரிய ஒரு வாழ்க்கையை அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?

இரத்தம் சிந்த வேண்டியதில்லை!போர்க்களம் சென்று போராட வேண்டியதில்லை.உடலை அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை. நம்மால் இயன்றவரை சிறுசிறு பங்குகள்,சேவைகள், தொண்டுகள் செய்யலாமல்லவா?

சிறு சிறு தியாகங்கள்

சிறு சிறு தியாகங்கள் செய்து மார்க்கத்தைப் படிப்பது,

பிறருக்குச் சத்தியத்தைப் போதிப்பது, அதற்காக உழைப்பது,

நாயகத் தோழியர் தியாகம் செய்து இரத்தம் சிந்திய இடங்களைப் போய் பார்ப்பது,

அதற்காக சிறிது நேரம் செலவு செய்வது,

வீண்கேளிக் கைகளை விடுவது,

நேரங்களை பயனுள்ளதாகக் கழிப்பது,

குர்ஆன் ஓதுவது, நேரம் தவறாது தொழுவது,

குழந்தைகளுக்கு இஸ்லாமிய ஒழுக்களைப் போதிப்பது,

நமது தோழியர், உறவினர்களை மார்க்கம் பயில அழைத்து வருவது,

தேவையுடையோருக்கும்,

ஆதரவற்றோருக்கும் உதவுவது,

நன்மையை ஏவித் தீமையை தடுப்பது, இஸ்லாமிய ஒழுக்கங்கள்,

மாண்புகளைப் பேணுவது,

குர்ஆன் சுன்னா வழியில் தவறாது வாழ்வது

இவற்றைத்தான் அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதரும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

நாம் இஸ்லாத்திற்காக இது கூட செய்யவேண்டாமா? யோசித்துப்பாருங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் இது போன்ற சிறு சிறு பணிகளையாவது செய்ய நமக்கு அருள் புரிவானாக.ஆமீன்.

பெண்களின் உயிரும் ஆண்களுக்கு சமமானவையே

[ ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் என்ற முறையில் இருவரும் சமமானவர்களே. இருபாலாருடைய உயிரும் சமமானவையே.

ஒழுக்கக் கேடாக நடப்பதற்கும் சாராயம் விற்பதற்கும் ஆடைகள் அணிவதற்கும் சமத்துவம் தேடுவோர் முதலில் உயிர்களைச் சமமாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நவீன யுகத்தில் கூட ஆண்களின் உயிரும் பெண்களின் உயிரும் சமமாகக் கருதப்படுவதில்லை.

கொலை செய்த பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் அதை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனுச் செய்கிறார்கள். பெண்கள் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் பொன்றவற்றின் சார்பாக இத்தகைய மனு அளிக்கப்பட்ட செய்தியை காண்கிறோம்.

ஒரு பக்கம் சமத்துவம் எனக் கூறிக்கொண்டு மறுபக்கம் பெண் என்பதற்காக கொலைகாரப் பெண்ணுக்காக சலுகைகள் கேட்கின்ற கேலிக் கூத்தைப் பார்க்கிறோம். 20 ஆம் நூற்றாண்டில் கூட உயிர்கள் அனைத்தும் சமம் எனக் கருதப்படாத போது ஆறாம் நூற்றாண்டிலேயே இருபாலாரின் உயிர்களும் சமமானவையே என்று இஸ்லாம் பிரகடனம் செய்தது.]

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنثَى بِالأُنثَى

நம்பிக்கையாளர்களே! கொல்லப்பட்டவர்களுக்கு (கொலையாளிகளின் மீது) கொலைத் தண்டனையளிப்பது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவருக்காக (அவரைக் கொன்ற) சுதந்திரமானவனும், அடிமைக்காக (அவரைக் கொன்ற) அடிமையும், பெண்ணுக்காக (அவளைக் கொன்ற) பெண்ணும் (என்ற அடிப்படையில் இத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்)”. (அல்குர்ஆன் 2:178) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்கள்காலத்திற்கு முன்னால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அநீதியான ஒரு சட்டத்துக்கு எதிராக இந்த வசனம் அருளப்பட்டது.

அடிமையாக இருக்கும் ஒருவன் அடிமையல்லாத ஒருவனைக் கொலை செய்தால் கொலை செய்த அடிமையைத் தண்டிக்க மாட்டார்கள். மாறாக கொலை செய்த அடிமையின் உரிமையாளனைத் தான் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கருதிவந்தனர். அடிமையல்லாதவனின் உயிருக்கு அடிமையின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணம்.

அதே போல் அடிமையாக இல்லதவன் அடிமையைக் கொன்றால் கொலையாளியை அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். மாறாக அந்த அடிமையின் விலையை உரிமையாளரிடம் கொடுத்து விடுவது போதுமானது என்று செயல்பட்டு வந்தனர். மேலே நாம் சுட்டிக் காட்டிய அதே நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.

அதே போல் ஒரு பெண் ஒரு ஆணைக் கொன்றால் கொலை செய்த பெண்ணுக்குத் தண்டனை வழங்காமல் அப்பெண்ணின் உறவினரான ஒரு ஆண் மகனைக் கொல்ல வேண்டும் என்று கருதி வந்தனர். ஆணுடைய உயிருக்குப் பெண்ணின் உயிர் சமமாகாது என்று அவர்கள் நம்பியதே இதற்குக் காரணமாகும்.

இதே போல் ஒரு பெண்ணை ஒரு ஆண் கொன்று விட்டால் கொலை செய்த ஆணுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படாது பெண்ணின் குடும்பத்துக்கு ஏதாவது தொகைளைக் கொடுத்தால் போதுமானது என்பது அன்றிருந்த நிலை. ஆண்கள் உயிரும் பெண்கள் உயிரும் சமமானவை அல்ல என்று அவர்கள் உறுதியாக நம்பியதே இதற்குக் காரணம்.

அடிமைகளை அடிமையும், பெண்ணைப் பெண்ணும் கொலை செய்தால் அதற்கும் கொலை தண்டனை வழங்கமாட்டார்கள். பெண்களும் அடிமைகளும் ஆண்களின் உடமைகளாகக் கருதப்பட்டதால் தேவையான நஷ்டஈட்டை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்பதும் அன்றைய நிலை.

இந்த அநீதியான சட்டத்தை ரத்துச் செய்வதற்குத் தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் என்ற முறையில் இருவரும் சமமானவர்களே. இருபாலாருடைய உயிரும் சமமானவையே என்ற பிரகடனம் தான் இது.

இவ்வசனத்தின் துவக்கமே கொல்லப்பட்டவர்களுக்காக கொலைத் தண்டனை அளிப்பது உங்கள் கடமைஎன்று பொதுவாக அறிவிக்கின்றது. கொல்லப்பட்டவர்கள் ஆணா? பெண்ணா? அடிமையா? எஜமானனா? என்றெல்லாம் பேதம் கிடையாது. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள் தான். இதைத் தவிர வேறு அடையாளங்கள் எதையும் இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ளலாகாது எனக் கூறுகிறது.

பொதுவாகக் கூறியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் விரிவாகவும் விளக்கமாகவும் தொடர்ந்து இவ்வசனம் கூறுகிறது.

அடிமையாக இல்லாதவனை அடிமையாக இல்லாதவன் கொலை செய்தாலும், அடிமையை மற்றொரு அடிமை கொலை செய்தாலும் பெண்ணைப் பெண் கொலை செய்தாலும் கொலையாளிக்கு கண்டிப்பாக கொலைத் தண்டனை தரப்பட வேண்டும். கொலையாளிக்கத்தான் அந்தத் தண்டனை தரப்பட வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இதை தமது ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளனர். ஒரு யூதர் இரண்டு கற்களுக்கிடையே ஒரு பெண்ணின் தலையை நசுக்கினார். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அப்பெண்ணிடம், ‘யார் உன்னைத் தாக்கியவர்? என்று கேட்கப்பட்டது. இவரா? அவரா? என்று கேட்டு வரும் போது அந்த யூதனின் பெயரைக் கூறியதும் ஆம்என்பது போல் சைகை செய்தார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளைப்படி அந்த யூதர் பிடிக்கப்பட்டு இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டார். அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி

யாரேனும் தனது அடிமையைக் கொன்றால் அவரை நாம் கொல்வோம். யாரேனும் தனது அடிமையின் காதை வெட்டினால் அவரது காதை வெட்டுவோம். மூக்கை வெட்டினால் அவரது மூக்கை நாம் வெட்டுவோம் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: சமுரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

இந்த நவீன யுகத்தில் கூட ஆண்களின் உயிர்களும் பெண்களின் உயிர்களும் சமமாகக் கருதப்படுவதில்லை. கொலை செய்த பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் அதை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனுச் செய்கிறார்கள். பெண்கள் இயக்கம், பெண்ணுரிமை இயக்கம் பொன்றவற்றின் சார்பாக இத்தகைய மனு அளிக்கப்பட்ட செய்தியை சமீபத்தில் கண்டோம்.

ஒரு பக்கம் சமத்துவம் எனக் கூறிக்கொண்டு மறுபக்கம் பெண் என்பதற்காக கொலைகாரப் பெண்ணுக்காக சலுகைகள் கேட்கின்ற கேலிக் கூத்தைப் பார்க்கிறோம். 20 ஆம் நூற்றாண்டில் கூட உயிர்கள் அனைத்தும் சமம் எனக் கருதப்படாத போது ஆறாம் நூற்றாண்டிலேயே இருபாலாரின் உயிர்களும் சமமானவையே என்று இஸ்லாம் பிரகடனம் செய்தது.

இதே போல் கணவர்களாலும் இளம் மனைவிகள் கொல்லப்படுகின்றனர். ஸ்டவ் வெடித்துச் செத்ததாக பைல்கள் குளோஸ் செய்யப்படுகின்றன. குடும்ப விஷயத்தில் தலையிடக் கூடாது என்ற கோட்பாட்டின் படி அக்கொலையாளிகள் மீது பெரும்பாலும் வழக்குப் பதிவதில்லை. கணவனின் உயிர், மனைவியின் உயிரை விடச் சிறந்தது என்று கருதுகிறார்கள். இத்தகைய போக்கையும் இவ்வசனம் கண்டிக்கிறது.

ஒழுக்கக் கேடாக நடப்பதற்கும் சாராயம் விற்பதற்கும் ஆடைகள் அணிவதற்கும் சமத்துவம் தேடுவோர் முதலில் உயிர்களைச் சமமாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆனின் இவ்வசனத்தை அவர்கள் சிந்திக்க வேண்டும்

வெட்கத்தை கைவிடலாமா?

[ பெண்களிடம் ஏற்படும் இயல்பான வெட்க வெளிப்பாடு, அவர்களின் அழகை மெருகூட்டும், மதிப்பையும் அதிகரிக்கச் செய்யும். நாணத்தால் ஒதுங்கி நிற்கும் பெண்களைக் காணும் ஆணொருவன்-அவன் தரங்கெட்டவனாக இருந்தாலும்-அந்தப் பெண்ணிற்கு மதிப்பளிக்க வருகிறான் என்பதே நிதர்சன உண்மை.

உடுத்தி இருக்கும் ஆடை சற்றுவிலகினால் ஆடையை சரி செய்து கொள்வது வழக்கம். வேஷ்டி அணிந்து செல்லும் ஒருவன் காற்றினால் தன் ஆடை விலகும்போது மூட முயற்சிக்கிறான். இதுதான் வெட்கத்தின் வெளிப்பாடு.

பிறரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியோ, ஈர்ப்போ இல்லாத ஆண் தன்னை மறைக்க முயற்சிக்கிறான். அவன் அப்படி மறைக்காவிட்டாலும் அவனால் எவருக்கும் சஞ்சலம் ஏற்படப் போவதில்லை ஆனால் பெண்ணொருத்தி ஆடை விலகிய நிலையில் சென்றால்……? ஆண் பட்டாளமே அணி வகுக்கும்.

ஆண்-பெண் வித்தியாசமின்றி ஒரு முஃமீனிடம் நாணம் இருந்தாக வேண்டும் என்கிறது ஒரு நபிமொழி. நாணம் உள்ளவன், தவறு செய்ய யோசிப்பான், மக்கள் முன் அசிங்கப்பட்டு விடுவோம் என்ற பயம்கலந்த நாணம், தவறு செய்வதிலிருந்து ஒருவனை காப்பாற்றும்.] 

அன்புத் தங்கைக்கு…….

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நலம் நலமறிய விருப்பம்…

இந்த விடுமுறை நாட்கள் இனிமையாக அமைந்தது. குறிப்பாக நம் மாமி வீட்டுத்திருமண நிகழச்சியில் நம் உறவினர்களை ஒரே இடத்தில் சந்தித்த சூழல் மறக்க முடியாது.

இந்த திருமணத்தில் நீயும் உன் தோழியருடன் இணைந்து இருந்தது கண்டு சந்தோஷம் அடைந்தேன் ஆனால் உன் தோழியரில் சிலர் அருகில் அந்நிய ஆண்கள் உள்ளனர் என்ற உணர்வு இல்லாமல் நடந்து கொண்ட விதம் பலருக்கும் சங்கட்த்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

அந்த தோழியர்களுக்கு நீ வெட்கம்-நாணம் பற்றி கூறுவது நல்லது. இஸ்லாம் அதை எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்பதை நீ அறிவாய்…

மதீனாவாசியான ஒரு நபித்தோழர், தம் சகோதரர் அடிக்கடி வெட்கப்படுவது கண்டு கண்டித்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைக் கண்டிக்காதீர்கள். ”நிச்சயமாக நாணம் கொள்வது ஈமானில் ஒரு பகுதி என்று கூறினார்கள்” என இப்னு உம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (புகாரி)

ஆண்-பெண் வித்தியாசமின்றி ஒரு முஃமீனிடம் நாணம் இருந்தாக வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது. நாணம் உள்ளவன், தவறு செய்ய யோசிப்பான், மக்கள் முன் அசிங்கப்பட்டு விடுவோம் என்ற பயம்கலந்த நாணம், தவறு செய்வதிலிருந்து ஒருவனை காப்பாற்றும்…

வெட்கம், நாணம், மடம், பயிர்ப்பு, ஆகியவை பெண்களிடம் இருக்க வேண்டிய இயற்கைப் பண்பு என்று கூறுவர், நாணமில்லாத பெண்களை, பெண்ணாகவே எவரும் மதிப்பதில்லை..

பெண்களிடம் ஏற்படும் இயல்பான வெட்க வெளிப்பாடு, அவர்களின் அழகை மெருகூட்டும், மதிப்பையும் அதிகரிக்கச் செய்யும். நாணத்தால் ஒதுங்கி நிற்கும் பெண்களைக் காணும் ஆணொருவன்-அவன் தரங்கெட்டவனாக இருந்தாலும்-அந்தப் பெண்ணிற்கு மதிப்பளிக்க வருகிறான் என்பதே நிதர்சன உண்மை…

அடுப்பூதும் பெண்ணாயினும், ஆகாயத்தில் பறக்கும் பெண்ணாயினும் வெட்கம், நாணம் கொல்வது, அவர்களிடம் இருக்க வேண்டிய பண்பு. ஆனால் இந்த இயற்கை பண்பு இன்றையப் பெண்களிடம் உள்ளதா? நாணம் உள்ள பெண்களைக் காண்பதே அரிதுதான்..

பெண்களில் சிலர், கணவனை தாங்களே தேர்வு செய்வது என்ற பெயரில் காதல் கொண்டு, பீச்-லாட்ஜ் என தனிமைச் சந்திப்புகளால் கருவுற்று வந்து நிற்கும் அவல நிலையைக் காண்கிறோம். நாணத்தைக் கைவிட்டதால் வந்த வினை இது..

உடுத்தி இருக்கும் ஆடை சற்றுவிலகினால் ஆடையை சரி செய்து கொள்வது வழக்கம். வேஷ்டி அணிந்து செல்லும் ஒருவன் காற்றினால் தன் ஆடை விலகும்போது மூட முயற்சிக்கிறான். இதுதான் வெட்கத்தின் வெளிப்பாடு. காற்றினால் ஆடை விலகி தொடை தெரிந்தாலும் பரவாயில்லை என்று நடந்து கொள்பவனை நாணமில்லாதவன் என்றெ கூறுவோம்..

பிறரை சுண்டி இழுக்கும் கவர்ச்சியோ, ஈர்ப்போ இல்லாத ஆண் தன்னை மறைக்க முயற்சிக்கிறான். அவன் அப்படி மறைக்காவிட்டாலும் அவனால் எவருக்கும் சஞ்சலம் ஏற்படப் போவதில்லை ஆனால் பெண்ணொருத்தி ஆடை விலகிய நிலையில் சென்றால்……? ஆண் பட்டாளமே அணி வகுக்கும்.

ஆனால் அரைகுறை ஆடையுடன் பெண்கள் வந்தால், நிலைமை என்னவாகும்? ஈவ்டீசிங், ராகிங் போன்றவை நடக்கத்தானே செய்யும். பெண்கள் எப்படிதான் நடந்து கொள்வது?

”நபியே! முஃமீனான பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்! தங்கள் வெட்கஸ்தலங்களை பாதுகாத்து கொள்ளட்டும் தங்கள் அலங்காரத்தில்(சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதை தவிர(வேறு எதையும்) வெளிக்காட்ட வேண்டாம். மேலும் அவர்கள் தங்கள் மார்புகளை முந்தானைகளால் மறைத்துக் கொள்ளட்டும்!” (அல்குர்ஆன் 24:31)

”எந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம் ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் உள்ளான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்”. இதை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (திர்மிதி, அஹ்மத்)

நாணம் வளர பெண்கள் கொள்ள வேண்டிய முறையை மேற்கண்ட வசனமும், ஹதீஸும் கூறுகின்றன.

எனவே பெண்கள் பார்வையைத் தாழ்த்த வேண்டும், அலங்காரமும் உடல் பகுதிகளும் வெளியே தெரியாதவகையில் ஆடை அமைய வேண்டும்.

மார்புகளில் முந்தானை போடவேண்டும். அன்னிய ஆணுடன் தனிமையில் இருக்கக்கூடாது.

இன்றைய பெண்களிடம் இது குறைந்து விட்டதால்தான் நாணம் எடுபட்டுவிட்டது. நாணமில்லாத வாழ்க்கை இறைகோபத்தைப் பெற்றுத்தரும் என்பதை உன் தோழியரிடம் கூறு! எல்லாவற்றையும் விட நீ உன் வாழ்க்கையில் நாணத்தை விட்டு விடாதே!..

thanks: nidur. info

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s