இணைவைத்தல்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்

அல்லாஹ் தடுத்துள்ளவைகளில் முதன்மையானது ஷிர்க் எனும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பெரும் பாவச் செயலாகும்.
பெரும் பாவங்களிலேயே மிகப்பெரிய பாவங்களை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்)அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! ஆம், கூறுங்கள்! என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்..  என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மன்னித்துவிடலாம். ஆனால் இணைவைத்தலை மட்டும் மன்னிக்கவேமாட்டான். ஏனெனில் இதற்கு மட்டும் பிரத்தியேகமாக பாவமீட்சி பெறவேண்டியுள்ளது.
அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணையாக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (அல்குர்ஆன் 4:48)
ஷிர்க் -அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்- எனும் பெரும்பாவம் முஸ்லிமை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும். இணைவைக்கும் கொள்கையுடம் இறந்து விட்டவன் நிரந்தர நரகத்திற்குரியவனாவான்.
கப்ர் வழிபாடு
நல்லடியார்களின் கப்ர்களிலும், அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தியும் மார்க்கத்திற்கு முரணான, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பல செயல்கள் நடக்கின்றன. அவற்றில் ஓரிறைக் கொள்கைக்கு முரணான சிலசெயல்களும் அவை தவறு என்பதற்கான ஆதாரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1) சிலர், இறந்துவிட்ட நபிமார்களிடமும் நல்லடியார்களிடமும் -அவ்லியாக்களிடமும்- தங்களின் தேவைகளை கேட்டுப் பிரார்த்திக்கின்றனர், பரிந்துரைக்க வேண்டுகின்றனர். துன்பங்களை நீக்கக் கோருகின்றனர், அவர்களிடம் உதவி, அடைக்கலம் மற்றும் பாதுகாப்புத் தேடுகின்றனர்.
பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே!. அவனுக்கே உரிய இவ்வணக்கத்தை பிறருக்குச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ

(நபியே!) உமதிரட்சகன் அவனைத் தவிர (மற்ற எவரையும்) வணங்கக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளான். (அல்குர்ஆன் 17:23)

أَمَّنْ يُجِيبُ الْمُضطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَئِلَهٌ مَعَ اللَّهِ

துன்பத்திற்குள்ளானவனின் அழைப்பிற்கு பதிலளித்து, அவனுடைய தீங்கை நீக்குகின்ற, மேலும் உங்களை பூமியின் பிரதிநிதிகளாக்குகின்ற அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவன் இருக்கின்றானா? (நிச்சயமாக இல்லை) (அல்குர்ஆன் 27:62)
2) சிலர், சில பெரியார்கள் மற்றும் அவ்லியாக்களின் பெயர்களை நிற்கும் போதும், உட்காரும் போதும், கஷ்டத்தின் போதும் கூறும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் ஒருவர்: யா முஹம்மத்! என்கிறார். மற்றொருவர்: யா அலீ! என்கிறார். மற்றொருவர்: யா ஹுஸைன்! என்கிறார். அவர்: யா பதவீ! என்கிறார். இவர்: யா ஜீலானி! யா முஹைதீன்! என்கிறார். அவர்: யா ஷாதலீ! என்கிறார். இவர்: யா ரிஃபாயீ! என்கிறார். அவர் ஐதுரூஸை அழைக்கிறார். இவர் ஸெய்யிதா ஜைனபை அழைக்கிறார். மற்றொருவர் இப்னு அல்வானை அழைக்கிறார்.

 
அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ

அல்லாஹ்வைத் தவிர நீங்கள் அழைப்பவர்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற அடியார்களே! (அல்குர்ஆன் 7:194)
3) கப்ரை வழிபடும் சிலர் அதனை வலம் வருகிறார்கள். அதன் மூலைகளை கையால் பூசி அதனை உடலில் தடவிக் கொள்கிறார்கள். அதன் மணலை முத்தமிடுகிறார்கள். முகத்தில் பூசிக் கொள்கிறார்கள். கப்ர்களைக் கண்டால் உடனே ஸஜ்தாவில் விழுந்து விடுகிறார்கள். மேலும் கப்ர்களுக்கு முன்னால் மிகவும் பயபக்தியுடனும் பணிவுடனும் சிரம் தாழ்ந்தவர்களாக, அச்ச உணர்வுடன் நின்று கொண்டு, நோயை நீக்க, குழந்தை கிடைக்க, தேவைகள் நிறைவேற மற்றும் இதுபோன்ற தன் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள். என்னுடைய தலைவரே! நெடுந்தூரம் பயணம் செய்து உங்களிடம் வந்துள்ளேன். எனவே என்னை நஷ்டமடைந்தவனாக வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிவிடாதீர்! என்றுகூட சிலர் வேண்டுகிறார்கள். ஆனால்
அல்லாஹ் கூறுகிறான்:

وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لَا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُونَ

மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிகவழிகெட்டவன் யார்? அவர்களோ, இவர்களின் அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 46:5)
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ

அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக பிரார்த்தித்தவனாக மரணித்தவன் நரகம் புகுந்துவிட்டான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் -ரலி, நூல்: புகாரீ 4497)
4) சிலர் கப்ர்களுக்கு சென்று மொட்டையடித்துக் கொள்கின்றனர். சிலர் கப்ர்களின் கண் கொள்ளாக்காட்சி, அவ்லியாக்களின் அபரிமித ஆற்றல் என்றெல்லாம் பல தலைப்புக்களில் கட்டுக் கதைகளை இட்டுக்கட்டி எழுதியுள்ளனர். அந்த புத்தகத்திற்கு மனாஸிக் ஹஜ்ஜில் மஷாஹித் -கண்கூடான ஹஜ் வழிபாடு- என்றும் பெயர் சூட்டியுள்ளனர். சிலர் அவ்லியாக்கள்தான் இவ்வுலகில் ஆட்சி செய்கிறார்கள் என்றும் துன்பம் தரவும் இன்பம் தரவும் அவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:

وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ

அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குபவன் அவனைத் தவிர(வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை அடையச் செய்கின்றான். அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 10:107)

 

 அல்லாஹ் அல்லாதவருக்காகப் பலியிடல்

 அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டிய தொழுகை போன்ற வழிபாடுகளில் பலியிடுதலும் ஒன்றாகும். அதனை பிறருக்காகச் செய்வது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

எனவே நீர் உமது இரட்சகனைத் தொழுது, (குர்பானியும் கொடுத்து அதனை அவனுக்காக) அறுப்பீராக! (அல்குர்ஆன் 108:2)

அதாவது: அல்லாஹ்வுக்காகவே பலியிடுவீராக! அல்லாஹ்வுடைய பெயர் கூறியே அறுப்பீராக!

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:

وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அலீ -ரலி, நூல்: முஸ்லிம் 3657)

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதில் இரண்டு விதமான குற்றங்கள் உன்னள.

1) அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுப்பது
2) அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறி அறுப்பது.

இவ்விரண்டில் எந்த ஒன்று நிகழ்ந்தாலும் அதனை சாப்பிடுவது ஹராம் ஆகும். நமது நடைமுறையில் மலிந்து கிடக்கும் அறியாமைக் காலச் சடங்குகளில் ஷைத்தானுக்காக பலியிடும் வழக்கமும் ஒன்றாகும். வீடு வாங்கினாலோ, வீடு கட்டினாலோ, கிணறு தோண்டினாலோ ஷைத்தானின் துன்பத்திற்கு பயந்தவர்களாக அந்த இடத்திலோ, அல்லது அந்த மண் மீதோ அறுத்துப் பலியிடுகிறார்கள். இதுவும் தவறான பலியிடுதலேயாகும்.
சூனியம், குறி, ஜோஸியம் பார்த்தல்

சூனியம் இறைநிராகரிப்புச் செயலாகும். அது மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். சூனியம் என்பது எந்தப் பயனையும் பெற்றுத்தராத, மாறாக தீமைகளையே விளைவிக்கும் பாவச்செயலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ

அவர்களுக்கு எந்தப் பயனும் தராத, அவர்களுக்கு துன்பமிழைக்கும் ஒன்றை- சூனியத்தை- கற்றுக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 2:102)

وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى

சூனியக்காரன் எங்கு வந்த போதிலும் வெற்றி பெற மாட்டான். (அல்குர்ஆன் 20:69)

1) நிச்சயமாக சூனியம் செய்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்:

وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ

மேலும் ஸுலைமான் (சூனியம் செய்து அல்லாஹ்வை) நிராகரிக்கவில்லை. எனினும் நிச்சயமாக ஷைத்தான்கள் தான் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சூனியத்தையும் பாபிலோ(ன் நகரி)னில் ஹாரூத், மாரூத் எனும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்த(தாகக் கூறி, பல)வற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். மேலும் அவ்விருவரும் நாங்கள் சோதனையாக இருக்கின்றோம். ஆதலால் (இதைக்கற்று) நீ காஃபிராகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. (அல்குர்ஆன் 2:102)

சூனியம் செய்பவர்களை கொலை செய்வதே மார்க்கத்தீர்ப்பாகும். சூனியத்தால் சம்பாதிப்பது ஹராமான, இழிவான செயலாகும். அறிவிலிகளும் அநியாயக்காரர்களும் பலவீனமான ஈமான் கொண்டவர்களும் தங்களின் எதிரிகளை சூனியத்தின் மூலம் பழிவாங்குவதற்காக சூனியக்காரர்களிடம் செல்கின்றனர். அநீதம் செய்தவர்கள் அதன் எதிர்விளைவாக தங்களை சூனியம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக சூனியக்காரர்களிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.
குல்அவூது பிறப்பில் ஃபலக், குல்அவூது பிறப்பின் னாஸ் மற்றும் இவைபோன்ற சில திருமறை வசனங்களின் மூலம் -மார்க்கம் அனுமதித்த முறையில்- அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடக் கடமைப்பட்டவர்கள் ஷிர்க்கான, ஹராமான வழிகளில் எங்கோ ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.
2) நிச்சயமாக ஜோஸியக்காரர்களும் குறிகாரார்களும் மகத்தான அல்லாஹ்வை நிராகரிக்கும் காஃபிர்களாவார்கள்.
மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் அறியமுடியாதபோது இவர்கள் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகின்றார்கள். மூட நம்பிக்கையுடையவர்களிடம் பணம் பறிப்பதற்காக பலவழி முறைகளை கையாளுகிறார்கள். மண்ணில் கோடிட்டுப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பாத்திரத்தில் நீரூற்றிப் பார்ப்பது, வெற்றிலையில் மைதடவிப் பார்ப்பது, கண்ணாடியில் பார்த்து மறைவானவற்றைக் கூறுவது போன்ற பலவழிகளில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் ஒரு முறை உண்மை கூறினால் 99 முறை பொய்யுரைப்பார்கள். ஆனால் மதிமயங்கியவர்கள். அவர்கள் ஒரு முறை கூறிய உண்மையை வைத்துக் கொண்டு இட்டுக்கட்டி பொய்யுரைக்கும் அனைத்தையும் உண்மையென நம்பிவிடுகின்றனர். திருமணம், வியாபாரம் மற்றும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் இன்ப, துன்பங்கள் பற்றி கேட்பதற்காகவும், காணாமல்போன பொருட்களைத் திரும்பப் பெறவும் அவர்களிடம் செல்கிறார்கள்.
3) சூனியம் மற்றும் ஜோஸியக்காரனிடம் சென்று, அவன் கூறுவதை உண்மை என நம்புபவன் இஸ்லாத்தை விட்டும் வெளியாகிவிட்ட காஃபிர் ஆவான்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ

சூனியக்காரனிடமோ, ஜோஸியக்காரனிடமோ சென்று அவன் கூறுவதை உண்மை என நம்புகின்றவன், நிச்சயமாக முஹம்மது நபி(ஸல்)அவர்களின் மீது இறக்கப்பட்ட (மார்க்கத்)தை நிராகரித்து விட்டான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூல்: அஹமத் 9171)
இவர்களுக்கு மறைவான ஞானமெல்லாம் கிடையாது என்று தெரிந்து கொண்டே அவர்களை சோதிப்பதற்காகவோ அல்லது இதுபோன்ற வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ அவர்களிடம் செல்பவன் காஃபிராகி விடமாட்டான். எனினும் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً

யாரேனும் குறிகாரனிடம் வந்து அவனிடம் ஏதேனும் கேட்டால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. (அறிவிப்பவர்: ஸஃபிய்யா -ரலி, நூல்: முஸ்லிம் 4137)

அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் நாற்பது நாட்களும் தொழுவது அவன் மீது கடமையாகும். மேலும் அவன் தான் செய்த இப்பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

 

தாயத்து தகடுகளில் பயன் இருப்பதாக நம்புதல்

 

 சூனியம் மற்றும் ஜோஸியக்காரர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தாயத்து தகடு தட்டு போன்ற அல்லாஹ்வுக்கு இணைவைக்க காரணமாகும் பொருட்களில் நிவாரணம் இருப்பதாக நம்மில் பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே அதனை கழுத்தில் கட்டிக் கொள்கின்றனர். கண்திருஷ்டி போன்றவைகளிலிருந்து பாதுகாப்புத் பெற அதனை அவர்களது குழந்தைகளின் கழுத்திலும் கட்டிவிடுகிறார்கள். உடலில் கட்டிக் கொள்கிறார்கள். வீடுகளிலும் கடைகளிலும் வாகனங்களிலும் தொங்க விடுகிறார்கள்.

 

 

 

 

 

 துன்பம் மற்றும் சோதனைகளிலிருந்து விடுபட பாதுகாப்புப்பெற பல வடிவங்களில் மோதிரங்களை அணிந்து கொள்கின்றனர். நிச்சயமாக இவைஅனைத்தும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கு மாற்றமான கொள்கைகளாகும். தவறான இக்கொள்கைகள் ஈமானில் பலவீனத்தையே அதிகப்படுத்தும். இவைகளின் மூலம் நோய் நிவாரணம் தேடுவது ஹராம் ஆகும்.

நிவாரணத்திற்காக இவர்கள் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் தாயத்து தகடுகளில் பெரும்பாலானவை இணைவைக்கும் வாசகங்கள், ஜின் ஷைத்தான்களிடம் அடைக்கலம் தேடுதல், புரியாத வரைபடங்கள், விளங்கிக் கொள்ளமுடியாத வாசகங்கள் ஆகியவைகளைக் கொண்டதான் தயாரிக்கப்படுகின்றன.

 மேலும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்காக ஓதவேண்டிய திருக்குர்ஆனில் சில வாசகங்களையும் சிலர் எழுதுகின்றனர். ஆனால் அதனுடன் ஷிர்க்கான வாசகங்களையும் கலந்து விடுகின்றனர். சில பாவிகள் திருக்குர்ஆனின் வசனங்களை அசுத்தத்தைக் கொண்டும் மாதவிடாயின் இரத்தத்தைக் கொண்டும்கூட எழுதுகின்றனர். எனவே தாயத்து தகடு தட்டு போன்றவற்றைக் கட்டுவதோ தொங்கவிடுவதோ ஹராமாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
مَنْ عَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)

தாயத்து தட்டுகளில் நன்மையோ தீமையோ கிடைக்கிறது என்று நம்புகின்றவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டான். அவன் அல்லாஹ்விடம் இப்பெரும் பாவத்திற்காகத் தவ்பாச் செய்யவில்லையெனில் அல்லாஹ் அவனை மன்னிக்க மாட்டான். அவனுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிடும் மேலும் அவனுக்கு சொர்க்கம் ஹராமாகி நிரந்தர நரகவாதியாகிவிடுவான்.

 அல்லாஹ் அல்லாதவைகள் மீது சத்தியம் செய்தல்

அல்லாஹ் தனது படைப்பினங்களில் அவன் நாடியவற்றின்மீது சத்தியம் செய்வான். ஆனால் படைப்பினங்களாகிய நாம் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்யக் கூடாது.
பலர் அல்லாஹ்வின் படைப்பினங்களின் மீது சத்தியம் செய்கின்றனர். சத்தியம் செய்யப்பட தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும்  எதுவும் கிடையாது. அவனே மகத்தானவன், மேன்மைமிக்கவன், அமைத்தையும் நன்கறிந்தவன்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

أَلَا إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ فَمَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ وَإِلَّا فَلْيَصْمُتْ

அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் உங்களுடைய தந்தையரின் மீது சத்தியம் செய்வதை நிச்சயமாக அல்லாஹ் தடுக்கின்றான். யாரேனும் சத்தியம் செய்வதானால் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும். அல்லது -வாய் மூடி- மௌனமாக இருக்கட்டும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரீ 6108)

 

مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ

 

கலாச்சார ஊடுருவல்!

 
உலகின் பல்வேறு இன, மொழி, தேசக் கலாச்சாரங்களிலிருந்தும் வேறுபட்டு அகில உலகத்தையும் தன்பால் ஈர்த்தக் கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரமாகும். இறை வேத வரிகளும் இறைத்தூதர் மொழிகளும் போதித்த இஸ்லாமியக் கலாச்சாரத்தை இம்மியும் பிசகாமல் இஸ்லாமியச் சமுதாயம் கடைப்பிடித்த காலமெல்லாம் அகில உலகுக்கும் முன்மாதிரியாக அது திகழ்ந்தது. இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டப் பல்வேறு சமுதாய மக்களும் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது, அதுநாள் வரை தாங்கள் பின்பற்றி வந்த சில கலாச்சாரங்களைத் தங்களையும் அறியாமல் சிலர் தங்களுடன் கொண்டு வந்தனர். காலப் போக்கில் அந்த அந்நியக் கலாச்சாரங்கள் வேர்விட்டு, கிளைபரப்பி, முழு இஸ்லாமியச் சமுதாயத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைக் கலாச்சாரத்துக்குக் குழிபறித்து விட்டது எனலாம்.

சிலை வணக்கக் கலாச்சாரம் போன்ற, “பாவம்” என்று பார்வையில் கண்காணத் தெரிந்த சில கலாச்சாரங்கள் நம்மிடம் நுழைய முடியவில்லையே தவிர, நல்லவைதாமே என்ற போர்வையில் நுழைந்த கலாச்சாரங்களைப் பாமர முஸ்லிம்கள் அலட்சியத்தோடு கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு பல சீர்கெட்டக் கலாச்சாரங்களின் ஊடுருவல் நம் இஸ்லாமியச் சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. இந்தக் கலாச்சார ஊடுருவல்களில் பல, ஷிர்க் என்னும் இணைவைத்தலில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை நம் சமுதாயத்தில் பலர் இன்னமும் உணர்ந்ததாகத் தெரிய வில்லை.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான் – (திருக்குர்ஆன் 4;:48)

இந்தக் காலாச்சார ஊடுருவலை அலட்சியம் செய்வோர், மற்றும் அவற்றுக்கு நியாயம் கற்பிப்போர் பின்வரும் நபி மொழியை நினைவிற் கொள்ள வேண்டும்.

எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: அபூதாவூத்.

என்னும் நபி மொழியை நன்றாகப் புரிந்து கொண்டால் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வளவு மோசமானது என்பதை உணரலாம். அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கருத்தாழமிக்க வார்த்தைகளை அலட்சியப் படுத்த எந்த ஒரு முஸ்லிமும் முன்வரமாட்டார்.

நமது அன்றாட வாழ்வில் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வாறெல்லாம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது என்பதைச் சிந்தித்து, ஆராய்ந்து, நல்லுணர்வு பெற வேண்டும். பிறப்பில், இறப்பில், வாழ்வில், திருமணத்தில் மற்றும் அன்னறாடப் பழக்க வழக்கங்களில் நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட இந்தக் கேடு கெட்டக் கலாச்சார ஊடுருவலை நாம் வேரோடும் வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தொடங்கி, பெண் குழந்தைகள் பருவமடைவதிலும் திருமணம் நடத்துவதிலும் புதிய வீடு கட்டுவதிலும், இப்படி அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவலால், “மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் எவ்வகையிலும் வேறுபடவில்லையே” என்று பிற மதத்தவர் விமர்சிக்கும் அளவுக்குப் போய்விட்டது.

பிறமதச் சகோதரர்கள் இஸ்லாத்தைப் படித்து தெரிந்துக் கொள்வதை விட முஸ்லிம்களாகிய நமது நடவடிக்கைகளைப் பார்த்துத் தான் இஸ்லாத்தை தெரிந்துக் கொள்ள முடியும். அப்படியிருக்க நமது நடவடிக்கைகள் இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு முரணாக இருந்தால் உண்மையான இஸ்லாத்தை எவ்விதம் மற்றவர்களால் புரிந்துக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர வேண்டாமா?

காலமும் நேரமும்

நல்ல காரியங்கள் நடத்துவதற்கு நல்ல நேரம் பார்ப்பது பிற சமூகத்தவர் பின்பற்றும் பழக்கம். இஸ்லாத்தில் “நல்ல நேரம்’, “கெட்ட நேரம்’ என்று நேரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. காலண்டரைப் பார்த்துக் காலநேரம் பிரிப்பது அறிவுக்கு ஏற்ற செயலும் அல்ல; அல்லாஹ்வுக்கு உகந்த செயலும் அல்ல.

நேரம் காலம் பார்த்து நடத்தப்பட்ட எத்தனையோ திருமணங்கள் விவகாரத்தில் தொடங்கி விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. காலமும் நேரமும் அவர்களுக்குக் கைகொடுக்வில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து “முகூர்த்த நேரம்” என்று பிற சமூகத்தவர் குறிப்பிடுவதை “முபாரக்கான நேரம்” என்று அரபியில் குறிப்பிடுவதால் மட்டும் இஸ்லாமிய அங்கீகாரம் பெற்று விட்டதாக ஆகிவிடாது.

பசிக்கும்போது உணவருந்த எவரும் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய், தன் குழந்தையைப் பெற்றெடுக்க நல்ல நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, எந்த மருத்துவரும் கால நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை.

வாழ்க்கையில் ஏற்படும் வெற்றியும் தோல்வியும் அல்லாஹ்வின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்று ஈமானில் உறுதி கொள்ள வேண்டும்.

நினைத்த காரியம் நடக்காமல் போவதும், தொடங்கிய காரியம் தோல்வி அடைவதும், இதைவிடச் சிறந்ததை நமக்குத் தருவதற்காக அல்லது இதன் மூலம் ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பதற்காக இறைவனுடைய ஏற்பாடாக இருக்கக் கூடும்.

அதை விட்டு விட்டு காலத்தின் மீதும் நேரத்தின் மீதும் பழி சுமத்துவது பெரும் பாவம். ஏனனில், இறைவன் கூறுகிறான். காலத்தை ஏசாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன்.” (ஹதீஸ் குத்ஸி)

தொடங்கிய காரியம் தோல்வி அடைந்தால், “நேரம் சரியில்லை” என்று நேரத்தைக் குறை கூறுவதும் பிறமதத்திலிருந்து நம்மிடம் புகுந்து விட்ட ஒரு கலாச்சார ஊடுருவல்தான்.

சகுனம் பார்ப்பது சரியானதல்ல

ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது, “எங்கே போகிறீர்கள்?” என்று யாராவது கேட்டு விட்டால் போகிற காரியம் நடக்காது என்று நம்புவதும், நடந்து செல்லும்போது காலில் ஏதேனும் தடுக்கினால் சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வதும், போகிற வழியில் பூனை குறுக்கிட்டால் போகிற காரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும்,

விதவைப் பெண்கள் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைப்பதும் வடிகட்டிய முட்டாள் தனம்.

நாம் நமது வேலையாகப் போகிறோம். பூனை தனது வேலையாகப் போகிறது. நமது வேலையைக் கெடுப்பது பூனையின் வேலையல்ல என்பதைச் சிந்தித்து உணர வேண்டும்.

பேசிக் கொண்டிருக்கும் போது சுவர்க்கடிகாரம் மணி அடித்தாலோ பல்லி சப்தமிட்டாலோ பேசும் பேச்சு உண்மையானது என்று கடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும், ‘பாலன்ஸ்’ தவறி பல்லி விழுந்துவிட்டால், பதறித் துடித்து காலண்டரைத் திருப்பி “பல்லி விழும் பலன்” பார்ப்பதும் ஆகிய இவை யாவும் அந்நியக் கலாச்சார ஊடுருவல்கள் தாம்.

தேதி பார்க்கக் காலண்டர் வாங்கும் போது பல்லி விழும் பலனும், ராசி பலனும் இல்லாத காலண்டர் வாங்கினாலே பெரும்பாலும் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடலாம்.

மூடக் கொள்கைகளை முற்றிலும் ஒதுக்கிய குர்ஆன் வசனங்களும், பெருமானார் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும், அடங்கிய இஸ்லாமியக் காலண்டர்கள் பரவலாக இப்போது விற்பனைக்கு வந்து விட்டன.

நல்ல சகுனம், கெட்ட சகுனம், எதுவுமே இஸ்லாத்தில் இல்லை. எவ்வித சகுனமும் பார்க்கக்கூடாது. சகுனங்கள் ஒரு போதும் நமது செயல்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டா.

நல்லதும் கெட்டதும் அல்லாஹ்விடமிருந்தே எற்படுகின்றது என்று நம்புவது, “ஈமான்” என்னும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

அல்லாஹ் விதித்தபடிதான் அனைத்துமே நடக்கும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமாக நமது உள்ளத்தில் வேரூன்ற வேண்டும். அந்த ஈமானின் உறுதி நமது இதயத்தில் இருக்கும் வரை தீமைகள் எதுவும் ஏற்படாது.

மந்திரிக்கச் செல்லாமலும் சகுனம் பார்க்காமலும் தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த எழுபது ஆயிரம் பேர் எனது சமுதாயத்தில் விசாரனையின்றி சுவர்க்கம் செல்வார்கள்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் புகாரி).

திருமணத்தில் தீய பழக்கங்கள்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட, ‘சீர்திருத்தத் திருமணங்கள்’ என்னும் பெயரில், இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் சிலர், இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!

மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து, மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்’ வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவனுக்குச் சமமான மகிமை அளிப்பதும் திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும், அரிசி அளக்க வைத்து அல்லாஹ்வின் இரணத்தை அள்ளி இறைப்பதும், மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும், பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும், ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும், ஆகிய இவை யாவும் அந்நிய கலாச்சார ஊடுருவல்தான் என்பதில் ஐயமில்லை.

சமுதாயம் சீர் பெற, இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப் பிடிக்க வேண்டும்.

நீங்கள் மணம் (செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்து விடுங்கள்” (அல்குர்ஆன் 4:4)

என்னும் இறைவசனம் “மஹர் கொடையைக் கொடுத்து மணம் முடியுங்கள்” என்று தெளிவாகக் கூறும்போது இதற்கு நேர் முரணாகப் பெண் வீட்டாரிடம் பணம் கேட்கும் இழி செயலாகிய – தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போய்விட்ட வரதட்சணை என்னும் வன்கொடுமை ஒரு கலாச்சார ஊடுருவல்தான்.

இந்தக் கலாச்சாரச் சீர்கேட்டினால் எண்ணற்ற இஸ்லாமிய இளம் பெண்கள் வாழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பல பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் வரதட்சணை கொடுக்க முடியாமல் வருடங்கள் பல கடந்தும் தம் பெண்மக்களை வாழ வைக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இறையச்சமுள்ள இஸ்லாமிய இளைஞர்களே! நீங்கள் எங்கே சென்றீர்கள்? வரதட்சணை வாங்கித்தான் மணம் முடிக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் பெற்றோர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லுங்கள். மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைவு படுத்துங்கள்.

வீடு கட்டுவதில் மூடப் பழக்கங்கள்

வீடு கட்டுவதற்கு முன், வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து, கட்டடப் பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம் வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவது நல்லது தான். அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் – மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச் சாஸ்திரங்களில் தங்கள் ஈமானை இழக்கின்றனர். இஸ்லாத்திற்கு எள்ளளவும் தொடர்பில்லாத இந்த வாஸ்து சாஸ்திரமும் ஒரு கலாச்சார ஊடுருவல் தான்.

மனையடி சாஸ்திரத்தில், ஓர் அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படியானால் அந்த அளவைத் தவிர்த்துக் கட்டப்படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணிப்பதில்லையா?

மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காது. இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பது நிச்சயம்.

 

நாம் வசிக்க உருவாக்கும் வீட்டை, நம் வசதிக்கு ஏற்றபடியும், இடத்திற்குத் தக்கபடியும், நீள அகலங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர வாஸ்து சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது, மனித வாழ்க்கையில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்த வல்லதன்று.

எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் இன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்ட வீடுகளில் வசிப்போர் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்க முழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?

கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் படுவதும் கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்து நம்மிடம் கூலி வாங்கிக் கொண்டு கட்டுபவர்களின் பிறமதக் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும் அங்கீகரிப்பதும் கதவு நிலை வைப்பதற்குக் கூட காலமும் நேரமும் பார்த்து, பூவும் பொட்டும் வைத்து, பூஜை புனஸ்காரங்கள் செய்வதும் காங்கிரீட் போடும் போது ஆடும் கோழியும் அறுத்துப் பலியிடுவதும் கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதும் ஆகிய இவை யாவும் அந்நியக் கலாச்சாரத்தின் ஊடுருவல் தான். இஸ்லாத்துக்கும் இந்தக் கலாச்சாரங்களுக்கும் கடுகளவும் தொடர்பில்லை.

பிறந்தநாள்விழாவும் பெயர் சூட்டு விழாவும்

பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள், ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாக இருப்பின் ஓர் ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும்; இது நபிவழி.

ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு, ஒரு பித்அத் உருவாகிவிட்டது. குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் ‘பெயர் சூட்டு விழா’ என்று அதற்கொரு பெயர் வைத்து, ‘அசரத்தைக்’ கூப்பிட்டுப் பெயர் சூட்டப்படுகிறது.

குழந்தை பிறந்தாலும் 40. திருமணத்திலும் 40. இறந்தவர் வீட்டிலும் 40. சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்த, ‘மண்டல’க் கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. பெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து அசரத்தைக் கூப்பிட்டுத்தான் பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ, தந்தையோ கூப்பிட வேண்டியது தான். இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லை.

 இன்னும் சிலர் அநாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி மெழுகுவர்த்தி ஏற்றி, கேக் வெட்டி, “ஹேப்பி பர்த் டே” கொண்டாடுகின்றனர். இது முழுக்க முழுக்க ஓர் அந்நியக் கலாச்சாரம். இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை.

மானங்கெட்ட மஞ்சள் நீராட்டு விழா

பெண்கள் பருவம் அடைந்தால், அதற்காக அழைப்பிதழ் அடித்து, உறவினர்களை அழைத்து, பூமாலை போட்டு, பூப்பு நீராட்டு விழா நடத்துவதும் அதற்காக விருந்து போடுவதும் கேட்பதற்கே கேவலமாக இல்லையா? மறைக்க வேண்டிய ஒரு செய்தியை ஊர் முழுக்கத் தம்பட்டம் அடித்து அறிவிக்க, பிள்ளையைப் பெற்றோருக்கு வெட்கமாக இல்லையா? எங்கிருந்து காப்பியடிக்கப் பட்டது இந்த மானங்கெட்ட கலாச்சாரம்?

 

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவம் அடைகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் அதற்கும் விழா நடத்த ஆரம்பித்து விடுவார்களோ?

பருவம் அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இறைவன் அளித்த அருட்கொடை. இயற்கையாக ஏற்படும் இந்த மாற்றத்தை பகிரங்கப் படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.

தனக்கு ஏற்படும் இயற்கை மாற்றங்களை ஒரு பெண் தன் தாயுடன் பகிர்ந்துக் கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அதைத் தந்தை கூட அறிய வேண்டும் என்று அவசியமில்லை.

“திருமணத்திற்குத் தயாராக ஒரு பெண் வீட்டில் இருப்பதைப் பலரும் அறிந்தால், பெண் கேட்டு வருவார்கள்” என்று சிலர் காரணம் சொல்வார்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் உறவினர்களுக்கும் அண்டை அயலாருக்கும் தெரியவரும். தாமாகவே பெண் கேட்டு வருவார்கள்.

இனியேனும் இதுபோன்ற கேவலமான விழாக்களைத் தவிர்ப்போம். மாற்றுக் கலாச்சாரங்களை ஒதுக்கி இஸ்லாமிய வழி நடப்போம்.

ஜாதகமும் ஜோதிடமும்

எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஏக இறைவனைத் தவிர வேறு எவருமே அறிய முடியாது என்று இறைமறை குர்ஆன் கூறுகிறது:

(இன்னும் நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வைத் தவிர்த்து வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்கள். இன்னும் (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 27 : 65)

ஜாதகம் எழுதி வைப்பதும் ஜோதிடத்தை நம்புவதும் பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கும் புறம்பானவை. இஸ்லாத்திற்கு முரணான இக்கொடிய குற்றங்கள் இன்று பல்வேறு பெயர்களில் பாமரர்களிடம் மட்டுமின்றி படித்தவர்களிடமும் பரவி விட்டன.

பெயர் ராசி, பிறந்தநாள் ராசி, பெண் ராசி, கல் ராசி, கலர் ராசி, இட ராசி, இனிஷியல் ராசி, என்று எத்தனைப் பெயர்களில் அவதாரம் எடுத்தாலும், கைரேகை ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், கிளி ஜோதிடம், பால் கிதாபு ஜோதிடம், என்று எத்தனைப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை அத்தனையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம். இவை அனைத்துமே மூட நம்பிக்கை மட்டுமல்ல, மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும். இவை யாவும் அந்நியக் கலாச்சார ஊடுருவல்தான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்:

எவர் குறி சொல்பவனிடம் சென்று அவன் சொல்வதை உண்மையென நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது (அறிவிப்பவர் அபூ ஹுரைரா. ஆதாரம் முஸ்லிம்).

நமது எதிர் காலத்தைக் கணித்துச் சொல்வதாகக் கூறி ஏமாற்றுகிறவன், நாள் முழுவதும் வீதிக்கு வீதி காத்துக் கிடக்கிறான். வீடு வீடாக ஏறி இறங்குகிறான். அன்றைய தினத்தில் எத்தனை பேர் தன்னிடம் ஜோதிடம் பார்ப்பார்கள் என்பதைக்கூட அவனால் கணிக்க முடியவில்லை.

தன்னுடைய ஒரு நாள் பொழுதைப் பற்றிக் கூட அறிந்துக் கொள்ள முடியாதவன் அடுத்தவருடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்வான் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்?

ஜோதிடம் என்றதும், பிற மத ஜோதிடக் காரர்களை மட்டும் என்று பலரும் கருதுகின்றனர். ‘பால் கிதாபு’ என்பதும் அரபுப் பெயர் தாங்கிய ஒரு வகை ஜோதிடமே! பால் கிதாபு பார்க்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் ஜோதிடக் காரர்களே! என்பதை மறந்து விடக்கூடாது.

பால் கிதாபுப் பார்த்துப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்பவர்களின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் கவனித்தால் அவர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கும். தமக்குத் தாமே பால் கிதாபு பார்த்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வக்கற்றவர்கள், மற்றவர் வாழ்க்கையைச் சீர்படுத்துவார்கள் என்று எப்படி நம்புவது?

“ஒவ்வொருவரும் பிறக்கும்போது ஏற்படும் கோள்களின் சஞ்சாரமே நல்லதும் கெட்டதும் நடப்பதற்குக் காரணம்” என்று நம்பும் புத்தி கெட்டவர்கள், புயல் வெள்ளத்திலும், பூகம்பத்திலும் ஒட்டு மொத்தமாக ஓர் ஊரே அழியும் போது, அந்த ஊரில் வாழ்ந்த, பல்வேறு காலங்களில் பிறந்த அனைவருக்குமே எப்படி ஒரே ஜாதகம் அமைந்தது? என்பதைக்கூட சிந்திக்க வேண்டாமா?

ஜாதகமும் ஜோதிடமும் மூட நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பவை என்பதை உணர்ந்து, முஸ்லிம் சமுதாயம் முற்றிலும் விடுபட வேண்டும். இறை நம்பிக்கையில் இன்னும் உறுதி கொள்ள வேண்டும்.

தாயத்தும் தகடுகளும்

அல்லாஹ்வின் வசனங்களை, அரபி எண்களாக உருமாற்றி அப்படியே சுருட்டி அலுமினியக் குழாய்களில் அடைத்து, கருப்பு நூலில் கோர்த்துக் கழுத்திலும் கைகளிலும் இடுப்பிலும் கட்டிக் கொண்டால், பில்லி சூனியம் பேய் பிசாசுகளை விட்டும் பாதுகாப்புக் கிடைக்கும் என்று சில அரைக் கிறுக்குகள் சொன்னதை நம்பி, ஆயத்துகளைத் தாயத்துகளாக்கித் தொங்க விட்டுக் கொண்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்:

எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ நிச்சயமாக அவர் இறைவனுக்கு இணை வைத்துவிட்டார் (ஆதாரம்: அஹ்மத்).

தற்காப்புக்காகப் பலரும் கராத்தே கற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டு வெறும் தாயத்துகளில் தற்காப்புத் தேடுபவர்களின் மடமையை என்னவென்பது?

தாயத்துகளை நியாயப் படுத்துவோர், “அதில் குர்ஆன் வசனங்கள்தாமே எழுதப்படுகின்றன” என்று கூறுவர். அப்படியானால், குர்ஆன் ஆயத்துகளைக் கட்டிக் கொண்டு மலம் கழிக்கச் செல்லலாமா? என்று கேட்டால், “ஆயத்துகளுக்கு பதிலாக அரபி எண்கள்தாமே எழுதப்படுகின்றன?” என்று அறிவு(?)ப்பூர்வமான பதில் கேள்வி கேட்பர்.

இதிலிருந்து எண்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எண்கள் எப்படி மனிதனைப் பாதுகாக்கும்? என்பதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களாக இருக்கின்றனர்.

சில தாயத்துகளைப் பிரித்துப் பார்த்தால், சினிமா டிக்கட்டுகளும், பஸ் டிக்கட்டுகளும் கூட இருக்கும். இவை அவசரமாகத் தயாரிக்கப்பட்ட, “அர்ஜன்ட்” தாயத்துகள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

தங்கள் வயிற்றை நிரப்ப, கயிற்றை விற்று ஏமாற்றுகிறார்கள். இன்னுமா நீங்கள் ஏமாறப் போகிறீர்கள்? ஷிர்க்கை ஏற்படுத்தும் தாயத்துகளை அறுத்து எறியுங்கள்.

 

இன்னொரு அநாச்சாரக் கலாச்சாரம் உண்டு. அதுதான் அரபி எண்களை குறுக்கெழுத்துப் போட்டிக் கோடுகளில் அடக்கிப் பித்தளைத் தகடுகளை பிரேம் போட்டு மாட்டி வைத்தால், வீட்டுக்குப் பாதுகாப்பு என்று மூளையற்றவர்கள் சொன்னதை நம்பி மூலைக்கு மூலைத் தொங்க விடுவது. இவர்கள் இறை வணக்கங்களால் தங்கள் இல்லங்களை நிரப்புவதை விட்டு, ஈயம் பித்தளைத் தகடுகளில் தங்கள் ஈமானைப் பறி கொடுத்தவர்கள்; பில்லிச் சூனியத்திலிருந்து பாதுகாக்கும் என்று நம்பிப் படிகாரக் கற்களை வீட்டுப் படிகளில் மாட்டி வைத்தவர்கள்; கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று புத்தி கெட்டுப் போய் பூசணிக்காயைக் கட்டி வைத்தவர்கள்; வீடுகளில் மட்டுமின்றி, வியாபார நிறுவனங்களிலும் இந்த ‘அஸ்மா’த் தகடுகளை மாட்டி வைத்தால், வியாபாரம் பெருகும் என்று மூட நம்பிக்கைக் கொண்டவர்கள்.

இந்தத் தகடுகளை விற்பனை செய்வோர், தாங்கள் தயாரித்தத் தகடுகள் முழுவதும் விற்றுத் தீரும்படித் தங்களுக்குத் தாங்களே தகடு செய்துக் கொள்ளாமல், கடைக் கடையாய் அலைவதைக் கண்ட பிறகாவது, இது ஏமாற்று வேலை என்பதை உணர வேண்டாமா?

இனியேனும், இவைகள் யாவும் இஸ்லாத்திற்கு முரணான மூடப் பழக்கங்கள் என்பதை உணர வேண்டும்.

தரமானப் பொருளும், நியாயமான விலையும், கனிவானப் பேச்சும்தான் வியாபாரத்தைப் பெருக்குமே தவிர, பித்தளைத் தகடுகளும் பிரேம் போட்ட அஸ்மாக்களும் ஒரு போதும் வியாபாரத்தைப் பெருக்காது. மாறாக, பாவப் படுகுழியில் கொண்டு போய் தள்ளும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மரணித்தவர் வீடுகளிலும்

அன்றாட வாழ்க்கையின் அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவல் முஸ்லிமின் மரணத்தைக் கூட விட்டுவைக்கவில்லை.

ஒரு மனிதன் இறந்து விட்டால் இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி என்றும் திவசம் என்றும் புரோகிதர்ளைக் கொண்டு பிறமதத்தவர் நடத்தும் காரியங்கள் அவர்களுடைய கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் இவை இஸ்லாத்தில் உள்ளவை அல்லவே!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த போதே அவர்கள் மிகவும் அன்புடன் நேசித்த அவர்களுடைய மனைவி, நமது அன்னை ஹதீஜா (ரலி) அவர்களும் இன்னும் எத்தனையோ அருமை சஹாபாக்களும் இறந்தனரே! அவர்களுக்கெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 7 ஆம் நாள், 40 ஆம் நாள் என்று எந்த பாத்திஹாவும் ஓதியதாக ஆதாரப்பூர்வமான எந்த நபி மொழியும் நமக்கு அறிவிக்க வில்லையே!

இஸ்லாமியப் பெயர் தாங்கிய புரோகிதர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உருவாக்கிக் கொண்ட இந்த பாத்திஹாக்கள் அனைத்தும் பிறமதக் கலாச்சார ஊடுருவல் தானே தவிர இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல.

வணக்கம் கூறுதல்

ஒருவரையொருவர் சந்திக்கும் போது அழகிய முகமன் கூறி அறிமுகம் செய்து கொள்வதற்கு இஸ்லாம், பொருள் பொதிந்த “அஸ்ஸலாமு அலைக்கும் (தங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக)” என்னும் வாக்கியத்தையும் அதனைக் கேட்டவர் மறுமொழியாக, “வஅலைக்குமுஸ்ஸலாம் (அவ்வாறே தங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக)” என்னும் அற்புத பதிலையும் சொல்லித் தருகிறது.

ஆனால் சிலர் மாற்று மத நண்பர்களைக் கண்டால், “வணக்கம்” என்று சொல்வதைப் பரவலாகக் காண்கிறோம். வணக்கம் என்னும் சொல்லின் பொருள், “நான் உங்களை வணங்குகிறேன்” என்பதாகும். மனிதனை மனிதன் வணங்கலாமா? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகிய லாஇலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமாவுக்கே முரணானதல்லவா?, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்னும் திருக்கலிமாவை மன, மெய், மொழியால் மனதாரச் சொன்ன ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதனை வணங்குவதாகச் சொல்வது மிகப் பெரிய பாவம் அல்லவா?

நம்மில் பலர் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வணக்கம் என்னும் தமிழ்ச் சொல்லும் ‘நமஸ்காரம்’, ‘நமஸ்தே’ என்னும் வடமொழிச் சொற்களும் கூட ஓர் அந்நிய கலாச்சாரம்தான். இவை அனைத்தும் வணங்குதல் என்னும் அதே பொருளையே தருபவையாகும்.

இந்த அந்நிய கலாச்சாரம் நம்மில் ஊடுருவியதால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த அழகிய இஸ்லாமியக் கலாச்சாத்தைப் புறக்கணித்தவர்களாகி விடுகிறோம் என்பது ஒரு புறமிருக்க, ‘வணக்கம் கூறுதல்’ மனிதனை மனிதன் வணங்கும் ஷிர்க் என்னும் இணைவைத்தலுக்கே கொண்டு போய் சேர்க்கும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் நிறுத்த வேண்டும்.

 

இஸ்லாமிய சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்து போனதற்கு, அந்நியக் கலாச்சார ஊடுருவல்கூட ஒரு காரணம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம். அந்நியக் கலாச்சாரச்சத்தின் ஊடுருவல் காரணமாகத்தான் நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பல்வேறு காரியங்கள் இஸ்லாத்திற்கு முரணானவையாக இருந்தும், அவற்றை இஸ்லாத்தின் பார்வையில் தவறானவை என்று ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துச் சொல்லியும் ஏற்றுக் கொள்ள பலர் மறுக்கின்றனர்.

இக்கட்டுரையை முடிப்பதற்கு முன் மகத்துவமிக்க மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியை மறுபடியும் ஒரு முறை நினைவு படுத்திக் கொள்வோம்:

எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் மற்றொரு அறிவிப்பில், அவர்களையே சார்ந்தவர் என கூடுதலாக இன்னொரு வாசகமும் இடம் பெற்றுள்ளது.

இறைவன் தனது திருமறையில் இயம்பியவைகளையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் பொன்மொழிகளில் போதித்தவைகளையும் உள்ளது உள்ளபடி உணர்ந்து, நம்மில் நுழைந்து விட்ட அந்நிய கலாச்சார ஊடுருவல்களைக் கண்டு பிடித்து களையெடுத்தால், அறியாமையால் ஏற்பட்டுப் போன பிரிவுகளும் பிளவுகளும் நீங்கி ஒன்று பட்ட உயரிய சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் திகழும். இன்ஷா அல்லாஹ்.

 

 

 

 

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்பவன் நிச்சயமாக -அல்;லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: அபூதாவூத் 2829)

 

مَنْ حَلَفَ بِالْأَمَانَةِ فَلَيْسَ مِنَّا
அமானிதத்தின் மீது சத்தியம் செய்பவன் நம்மைச் சார்ந்தவனல்ல. (அறிவிப்பவர்: அபூபுரைதா(ரலி) நூல்: அபூதாவூத் 2831)
 

 

 

 

 

 

கஃபாவின் மீதோ  அமானிதம்  கண்ணியம்  உதவி  இன்னாரின் பரகத்  இம்மனிதரின் வாழ்நாள்  நபி(ஸல்)அவர்களின் மேன்மை  அவ்லியாக்களின் கண்ணியம் ஆகியவற்றின் மீதோ  தாய் தந்தையின் மீதோ  குழந்தையின் தலைமீது கை வைத்தோ அல்லது இவையல்லாத இதுபோன்ற முறைகளிலோ சத்தியம் செய்வது ஹராம்ஆகும். இவ்வாறு யாரேனும் சத்தியம் செய்து விட்டால் அதன் பரிகாரமாக லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறவேண்டும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ وَاللَّاتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
சத்தியம் செய்பவன் தனது சத்தியத்தில் லாத்  உஸ்ஸா(என்ற சிலைகளின் பெயரைக்) கூறினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறிக் கொள்ளட்டும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ 4860)

இது போன்றே ஷிர்க்கான  ஹராமான பல வாசகங்களை முஸ்லிம்களான நம்மில் பலர் பயன்படுத்துகின்றனர். அவற்றில் சில இதோ:

அல்லாஹ்வுடன் பிறரை இணைத்தல்:
1)அல்லாஹ்வைக் கொண்டும் உங்களைக் கொண்டும் பாதுகாவல் தேடுகிறேன்.
2)நான் அல்லாஹ்வின் மீதும் உங்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளேன்.
3)இது அல்லாஹ்வின் மூலமும் உங்கள் மூலமும் கிடைத்ததாகும்.
4)எனக்கு அல்லாஹ்வையும் உங்களையும் தவிர வேறு எவருமில்லை.
5)எனக்கு வானத்தில் அல்லாஹ்வும் பூமியில் நீங்களும் இருக்கின்றீர்கள்.
6)அல்லாஹ்வும் இம்மனிதரும் இல்லையெனில்…..
7)நான் இஸ்லாத்தை விட்டும் நீங்கிவிட்டேன்.
8)இயற்கை நாடி விட்டது!

காலத்தைத் திட்டுதல்:
காலத்தின் அழிவே! கஷ்டமே! -இது கெட்ட நேரம்  இது கஷ்டகாலம். -இது மோசடி நேரம். என்று கூறுவது (ஏனெனில் காலத்தோடு தொடர்புடைய இவ்வாசகங்கள் அனைத்தும் காலத்தைச் சுழலச் செய்கின்ற அல்லாஹ்வையே குறிக்கின்றன)
 

தவறான பெயரிடுதல்:
அடிமைத்துவ வாசகங்களை படைப்பினங்களுடன் இணைப்பது  உதாரணமாக  அப்துல்மஸீஹ்  அப்துன் நபி  அப்துல் ரசூல்  அப்துல் ஹுஸைன் என்று பெயரிடுவது.
மேற்கூறப்பட்டுள்ளதைப் போன்ற அனைத்தை விட்டும் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

 

தொழுகையில் அமைதியின்மை

 

அமைதி  தொழுகையின் அங்கங்களில் ஒன்றாகும். அமைகியற்ற தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை. தொழுகையில் அமைதியின்மை  ருகூவிலும் ஸுஜுதிலும் முதுகை நேராக வைக்காமலிருப்பது  ருகூவிலிருந்து எழுந்து நேராக நிற்காமலிருப்பது  இரு ஸஜ்தாக்களுக்கு மத்தியில் சிறு இருப்பில் முறையாக அமராதிருப்பது  இவை அனைத்தும் பெரும்பாலான தொழுகையாளிகளிடம் நாம் பரவலாகக் காணும் செயலாகும். இவ்வாறு அவசரமாக தொழும் தொழுகையாளிகள் தொழாத பள்ளிவாயில்களே கிடையாது. சந்தேகமின்றி இது தவறான செயலாகும். இவ்வாறு தொழுபவர்களை இதன் விபரீதங்களைக் கூறி எச்சரிக்கை செய்வது அவசியமாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
أَسْوَأُ النَّاسِ سَرِقَةً الَّذِي يَسْرِقُ مِنْ صَلَاتِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَسْرِقُ مِنْ صَلَاتِهِ قَالَ لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودَهَا

திருடுபவர்களில்  திருட்டால் மிகக் கெட்டதிருடன் தொழுகையை திருடுபவனே! என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! தொழுகையை எவ்வாறு திருடுவர்? என்று கேட்டனர். அதற்கு  தொழுகையின் ருகூஃவையும்  ஸுஜுதையும் முறையாக நிறைவேற்றாதவனே -தொழுகையை திருடுபவன்- என்று நபி(ஸல்)அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்: அஹமத் 21591)

 

لَا تُجْزِئُ صَلَاةُ الرَّجُلِ حَتَّى يُقِيمَ ظَهْرَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
ருகூவிலும் ஸுஜுதிலும் முதுகை நேராக வைக்கும்வரை ஒருவரின் தொழுகை நிறைவேறியதாகாது. (அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்பத்வீ (ரலி) நூல்: அபூதாவூத் 729)

 

 

 

 

 

 

 

அபூஅப்துல்லாஹ் அல்அஷ்அரீ (ரலி)அவர்கள் கூறுகிறார்கள். நபி(ஸல்)அவர்கள் தோழர்களுக்கு தொழுகை நடத்திவிட்டு  அவர்களில் சிலருடன் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது (பள்ளியில்) நுழைந்த ஒருவர் தொழ ஆரம்பித்தார். -கோழி கொத்துவதைப்போல்- மிகவிரைவாக ருகூவு  ஸுஜுது செய்து தொழுது கொண்டிருந்தார். இதனை கவனித்த நபி(ஸல்)அவர்கள், இவரைப் பார்த்தீர்களா? காகம் இரத்தத்தை கொத்துவது போல் தனது தொழுகையில் கொத்துகிறார். இவ்வாறு தொழும் வழமையுடன் மரணிப்பவர் முஹம்மது(ஸல்)அவர்களின் மார்க்கம் அல்லாத -வேறு- மார்க்கத்தில் தான் மரணிக்கின்றார். விரைவாக ருகூவு  ஸுஜுது செய்பவருக்கு உவமை  பசியோடிருப்பவர் ஓரிரு பேரீத்தம் பழங்களை சாப்பிடுவதை போன்றதாகும். அவை அவரது பசிக்கு போதுமானதல்லவே! என்று கூறினார்கள். (நூல்: இப்னுகுசைமா)

ஜைது பின் வஹப் அவர்கள் கூறிகிறார்கள். ஹுதைஃபா(ரலி)அவர்கள் ருகூவு  ஸுஜுதை பரிபூரணமாக செய்யாத ஒருவரைக் கண்டார்கள். அவரிடம்  நீர் தொழவில்லை. நீர் இவ்வாறு தொழும் வழமையுடன் மரணித்துவிட்டால் நிச்சயமாக நபி(ஸல்)அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டிய மார்க்கம் அல்லாத பிறமதத்தில் மரணித்தவராகி விடுவீர் என்று கூறினார்கள். (நூல்: புகாரீ)

தொழுகையை அமைதி இல்லாமல் தொழது கொண்டிருப்பவரிடம் அவரின் தவறை உணர்த்தப்பட்டால் அப்போது அவர் தொழுத தொழுகையை அமைதியுடன் திரும்பத் தொழவேண்டும். ஏனெனில் நபி(ஸல்)அவர்கள், அவ்வாறு அமைதியின்றி தொழுத மனிதரை பார்த்து, அவர்தொழுது முடித்தபின் இவ்வாறு கூறினார்கள்.

ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ
நீர் திரும்பிச் சென்று மீண்டும் தொழுவீராக! ஏனெனில் நீர் -முறையாக- தொழவில்லை. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ 757)

  அமைதியுடன் தொழும் சட்டம் தெரிவதற்கு முன்னர் அவசரமாக தொழுத தொழுகைகளை மீண்டும் தொழவேண்டியதில்லை. ஆனால் அதற்காக அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யவேண்டும்.

  செயலாற்றலுக்குச் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே எனினும் தாயத்து தட்டுகள் நன்மை-தீமைக்கு காரணமாக உள்ளன என்று சிலர் எண்ணுகின்றனர். இதுவும் ஒருவகையில் இணைவைத்தலேயாகும். ஏனெனில் நன்மை தீமைக்கு காரணமாக அல்லாஹ் ஆக்காததை இவர்கள் காரணமாக எண்ணுகிறார்கள்.

  

தொழுகையில் இமாமை முந்துதல்

 

மனிதன் இயற்கையிலேயே அவசரக்காரனாவான். 
 அல்லாஹ் கூறுகிறான்:
மனிதன் (பொறுமை இழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

الْأَنَاةُ مِنْ اللَّهِ وَالْعَجَلَةُ مِنْ الشَّيْطَانِ

நிதானம் அல்லாஹ்விடத்திலிருந்து உள்ளதாகும். அவசரம் ஷைத்தானிடமிருந்து உள்ளதாகும். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) நூல்: திர்மிதி 1935)

(இந்த ஹதீஸின் அறிவிப்பு தொடர் பலகீனமானதாகும்)

நமதருகில் நின்று தொழுவோரில் பலர் ருகூவு  ஸ{ஜுது மற்றும் தக்பீர்களில் இமாமை முந்திச் செல்கின்றனர். இமாமுக்கு முன்னரே ஸலாம் கொடுத்து விடுகின்றனர். சில சமயங்களில் நாமே இவ்வாறு நடந்துகொள்கிறோம். இதனை நாம் தவறாக நினைப்பதே கிடையாது. ஆனால் நபி(ஸல்)அவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள்.

أَمَا يَخْشَى الَّذِي يَرْفَعُ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يُحَوِّلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ

இமாமுக்கு முன்பே தலையை உயர்த்துபவர்  அவரது தலையை கடுதையின் தலையாக அல்லாஹ் மாற்றிவிடுவதை பயந்து கொள்ளவில்லையா? (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 647)

தொடுகைக்காக வருபவரே அமைதியாகவும் நிதானமாகவும் வரவேண்டும் என்ற கட்டளையிருக்கும் போது தொழுகையையே அவசரமாகத் தொழுவது தவறில்லையா?!
இமாமை முந்திச் செல்லக் கூடாது என்பதை தவறாகப் புரிந்து கொண்ட சிலர் இமாமை விட்டும் மிகத் தாமதமாகச் செல்கின்றனர். இதுவும் முறையற்ற செயலாகும். இமாமை பின் தொடரும் முறையை மார்க்க அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். இமாம் தக்பீர் கூறி முடித்தவுடன் அவரை பின்பற்றுபவர் தனது செயல்களை ஆரம்பிக்க வேண்டும். தொழுகையின் அனைத்து நிலைகளிலும் இவ்வாறே பின்பற்றவேண்டும். தக்பீருக்கு முந்தவோ  பிந்தவோ கூடாது. இதுவே சரியான முறையாகும்.

 வெங்காயம்  பூண்டு மற்றும் இதுபோன்ற வெறுக்கத்தக்க வாடை தரும் பொருட்களை சாப்பிட்டுவிட்டு அதன் வாடையுடன் பள்ளிவாயிலுக்கு வருவது கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால்) உங்களுடைய அலங்காரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் 7:31)
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلًا فَلْيَعْتَزِلْنَا أَوْ قَالَ فَلْيَعْتَزِلْ مَسْجِدَنَا وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ

வெங்காயம் அல்லது பூண்டை உண்டவர் நம்மை விட்டும் தனித்திருக்கட்டும் -அல்லது- நமது பள்ளியை விட்டும் தளித்திருக்கட்டும். அவருடைய வீட்டிலேயே அமர்ந்து கொள்ளட்டும். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரீ 855)

 مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ فَلَا يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلَائِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَ

வெங்காயம்  பூண்டு மற்றும்(அது போன்ற வாடையுடைய) குர்ராஸ் எனும் செடியை சாப்பிட்டவர் நமது பள்ளிவாயிலை நெருங்கவேண்டாம். ஏனெனில் மனிதர்கள் துன்புறும் பொருட்களின் மூலம் மலக்குகளும் துன்புறுகிறார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம் 876)

உமர்(ரலி)அவர்கள் மக்களுக்கு ஜும்ஆ உரை நிகழ்த்தும் போது இவ்வாறு கூறினார்கள். மக்களே! நிச்சயமாக நீங்கள் இரண்டு செடிகளைச் சாப்பிடுகின்றீர்கள். நான் அவைகளை அருவருப்பானவையாகவே கருதுகிறேன். அவை வெங்காயமும்  பூண்டும். நிச்சயமாக நபி(ஸல்)அவர்கள் எவரிடமேனும் இவ்விரண்டின் வாடையைக் கண்டால் அவரை பள்ளியிலிருந்து வெளியேறி பகீஃ-மண்ணறையின் பக்கம் சென்றுவிடுமாறும். அதனை சாப்பிட விரும்புபவர் சமைப்பதின் மூலம் அவற்றின் வாடையை போக்கி விடுமாறும் கட்டளையிடுவார்கள். (அறிவிப்பவர்: மிக்தான்(ரலி) நூல்: முஸ்லிம்)

கடின வேலைகள் செய்து வேர்வையுடனும் அக்குள் மற்றும் ஆடைகளில் அருவருக்கத்தக்க வாடையுடனும் பள்ளிக்கு வருவதும் இந்தத் தடையில் அடங்கும். இதைவிட மிககெட்ட நிலை என்னவெனில் -சிகரட் போன்ற- ஹராமாக்கப்பட்ட புகைபிடித்து விட்டு அதன் துர்நாற்றத்துடன் பள்ளிக்கு வருவதுதான். இவர்கள் அல்லாஹ்வின் அடியார்களான மலக்குகளுக்கும் தொழுகையாளிகளுக்கும் துன்பம் தருகின்றனர்.

 விபச்சாரம் செய்தல்

மனிதனின் கண்ணியத்தையும் சந்ததியையும் பாதுகாப்பது இஸ்லாத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எனவே அது விபச்சாரத்தை ஹராமாக்கியுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. மேலும் அது (மனிதகுலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்) வழியால் மிகக்கெட்டது. (அல்குர்ஆன் 17:32)

மார்க்கம் விபச்சாரத்தை தடுத்திருப்பதுடன் அதன் பக்கம் நெருக்கிவைக்கும் அனைத்து வழிகளையும் தொடர்புகளையும் அடைத்து விட்டது. இதனால்தான் பெண்கள் பர்தா அணியவேண்டும் ஆண்  பெண் இருவரும் தங்களின் பார்வைகளை தாழித்திக் கொள்ளவேண்டும்  அன்னியப் பெண்ணுடன் தனித்திருக்கக் கூடாது போன்ற கட்டளைகளிட்டுள்ளது.

திருமணம் செய்தவன் விபச்சாரத்தில் ஈடுபட்டால் இஸ்லாம் அவனுக்கு மிகக்கடுமையான தண்டனையை வழங்குகிறது. அத்தண்டனையின் மூலம் பிறரும் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக அத்தண்டனையை பொதுமக்களுக்கு முன்னிலையில் வழங்குமாறு கூறுகிறது. அத்தீயசெயலின் விபரீதங்களை உணர்வதற்காகவும் ஹராமான செயலில் ஈடுபட்டிருந்த போது இன்பம் அனுபவித்த அனைத்து உறுப்புக்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் மரணிக்கும் வரை கல்லெறிந்து கொல்லவேண்டும் என கட்டளையிடுகிறது.
விபச்சாரம் செய்தவன் திருமணம் செய்யாதவனாக இருந்தால் அவனை 100 முறை சாட்டையால் அடிக்கவேண்டும். மேலுமு; தண்டனைக்குப் பிறகு அவ்வூரை விட்டும் ஒரு வருடம் ஊர் நீக்கம் செய்யவேண்டும் என்றும் கட்டளையிடுகிறது. பொது மக்களுக்கு முன்னிலையில் தண்டிக்கப்பட்டு கேவலத்திற்கும் இழிவுக்கும் ஆளாகிவிட்டதினால் அந்நிலை மாறவேண்டும் என்பதே ஊர் நீக்கத்தின் பிரதான நோக்கமாகும்.

விபச்சாரம் செய்த ஆண்களும்  பெண்களும் மண்ணரை எனும் திரைவாழ்க்கையில் கீழ்ப்பகுதி விசாலமான  மேற்பகுதி குறுகிய நெருப்புக் குண்டத்தில் நிர்வாணமாக மிதப்பார்கள். அதன் கீழ்பகுதியிலிருந்து நெருப்பு மூட்டப்படும்  அதன் வேதனையால் அலறுவார்கள். அந்த நெருப்பு அவர்களை மேலே உயர்த்திச் செல்லும். அவர்கள் வெளியே தப்பிக்க முயற்சிப்பார்கள். அப்போது நெருப்பு அணைந்துவிடும். உடனே கீழ்பகுதிக்கு வந்துவிடுவர். இவ்வாறு மறுமை நாள்வரை வேதனை செய்யப்படுவார்கள்.
விபச்சாரம் வயது வரம்பின்றி அனைவரின் மீதும் ஹராம் ஆகும். அதில் மிகக் கேவலமான நிலை யாதெனில் தனது வாழ்நாளின் தவணை முடியப்போகும் நிலையில்  கப்ர் வாழ்க்கை நெருங்கிவிட்ட முதியபருவத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுவது தான்.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.

ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ -قَالَ أَبُو مُعَاوِيَةَ- وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ وَمَلِكٌ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِرٌ

அல்லாஹ் மறுமை நாளில் மூன்று மனிதர்களுடன் பேசவோ  அவர்களை தூய்மைப் படுத்தவோ  அவர்களை -அருளுடன்- பார்க்கவோ மாட்டான். அவர்களுக்கு நோவினைதரும் கடும் வேதனை உள்ளது. அவர்கள்: விபச்சாரம் செய்யும் முதியவர்  பொய்யுரைக்கும் அரசன்  பெருமையடிக்கும் ஏழை. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 156)

விபச்சாரத்தின் மூலம் பொருளீட்டுவது மிகக்கெட்ட  கேவலமான வியாபாரமாகும். இரவின் நடுப்பகுதியில்  வானக் கதவுகள் திறக்கப்படும் நேரத்தில் விபச்சாரி தான் பாதுகாக்க வேண்டிய உறுப்புக்களை தவறான பாதையில் பயன்படுத்த பிறரை தேடி அலைந்து கொண்டிருக்கின்றாள். வறுமையின் காரணத்தினாலோ  தேவையின் காரணத்தினாலோ ஒரு போதும் மார்க்கச் சட்டத்தை தகர்த்து. ஹராமை ஹலாலாக்கி விடமுடியாது. பத்தினிப்பெண்ணுக்கு பசியெடுத்தால் தன்னுடைய மார்பகங்களில் கூட உணவருந்தமாட்டாள் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட பத்தினிப்பெண் வறுமைக்காக ஒரு போதும் தனது வெட்கத்தலங்களை விற்பனைப் பொருளாக்கமாட்டாள்.

நாம் வாழும் இக்காலத்தில் மானக்கேடான அனைத்து வாயில்களும் திறந்துவிடப்பட்டுவிட்டன. ஷைத்தான் தனது சூழ்ச்சியால் தனது பாதையை அவனது நண்பர்களுக்கு மிகவும் எளிதாக்கிவிட்டான். அவனை பாவிகளும் மோசடிக்காரர்களும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இதனால் பெண்களின் வெளிப்படையான அலங்காரமும் அரைநிர்வாணமும் பெருகிவிட்டது. கண்களுக்கு கவர்ச்சியும்? தீயபார்வைகளும் பரவலாகிவிட்டது. ஆண்  பெண் ஒன்றாகக் கலப்பது சகஜமாகிவிட்டது. மஞ்சள் பத்திரிக்கைகளும் நிர்வாணப் படங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டன. பாவம் செய்ய வாய்ப்பிருக்கும் நகரங்களுக்கு பயணம் செய்வது அதிகரித்து விட்டது. பாவப் பொருட்களின் வியாபார நிறுவனங்கள் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டன. கற்பழிப்பும் கண்ணியமிழப்பும் விபச்சாரக் குழந்தைகளும் சிசுக் கொலைகளும் மலிந்துவிட்டன.

 

 

யா அல்லாஹ்! எங்கள் மீது அருள்புரிவாயாக! கிருபை செய்வாயாக! எங்களுடைய தவறுகளை மறைத்துவிடுவாயாக! இழிவான அனைத்து வழிகளை விட்டும் எங்களை பாதுகாத்தருள்வாயாக! எங்களுடைய உள்ளங்களை தூய்மைப் படுத்திடுவாயாக! எங்கள் மறைவான உறுப்புக்களை பத்தினித்தனமாக்கிடுவாயாக! எங்களுக்கும் ஹராமிற்கும் மத்தியில் பெருத்திரையையும் நெடுஞ்சுவரையும் ஏற்படுத்திடுவாயாக!

மனைவி மறுப்பது

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் தனது மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வரமறுத்து விட்டதால் அவர் அவள்மீது கோபமாக இரவைக் கழித்தால் காலைவரை அவளை மலக்குமார்கள் சபித்துக் கொண்டிருக்கின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரலி) நூல்: புகாரீ)

அதிகமான பெண்கள் கணவரோடு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால் பழிவாங்குகிறோம் என்று நினைத்துக் கொண்டு படுக்கைக்கு செல்ல மறுக்கின்றார்கள். பெண்களின் இந்த தவறான முடிவு கணவன் ஹராமான செயல்களில் ஈடுபடுவதற்கும், அவன் வேறொரு மனைவியை தேர்ந்தெடுக்கும் சிந்தனையை ஏற்படுத்தவும் காரணமாகிறது. எனவே பெண்களின் செயல்கள் அவர்களுக்கே பாதகமாகின்றன. எனவே கணவன் அழைப்பிற்கு மனைவி உடன்பட வேண்டும். அதுவே நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் தனது மனைவியை படுக்கைக்கு அழைத்தால் அவள் ஒட்டகத்தின் முதுகில் அமர்ந்திருந்தாலும் -இறங்கி வந்து- அவருக்கு பதிலளிக்கட்டும். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: இப்னுமாஜா)

மனைவி நோயாளியாகவோ, கற்பமாகவோ அல்லது வேறு ஏதேனும் துன்பத்திலோ ஆட்பட்டிருக்கும் போது அது நீங்கும் வரை கணவன் அவளை உடலுறவு போன்ற காரியங்களில் ஈடுபட அழைத்து அவளுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது.

 (தொடரும் …இன்ஷா அல்லாஹ்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s